கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுஞாயிற்றுக்கிழமை (17) முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது. வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்வை மிக உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நினைவுத்தூபியில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக […]
பஸில் ராஜபக்சவுக்குச் சொந்தமான வீட்டை கைப்பற்றிய மாணவர்கள்!

மல்வானையில் உள்ள அரச சொத்தான வீட்டை மாணவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை அரசின் அனுசரணையை அப்பட்டமாகக் காட்டுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார். பஸில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டை பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் மாணவர்கள் அந்த வீட்டைத் தமக்குள்ளே துப்புரவு […]
தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை வலியுறுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வோம்!

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் ஊர்திப் பயணம், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல், உள்ளூராட்சி சபைகளில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில மூன்று தசாப்த காலப் போரில் உயிர்நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் […]