“ஈழத்தமிழர் இன அழிப்பை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்தன!” – இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: “ஈழத்தமிழர்களின் இன அழிப்பின் போது திமுக மற்றும் அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன; உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு முதலமைச்சர் விஜய்யின் சேவை தேவை” என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தவெக அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார். செய்தியாளர் சந்திப்பில் ராமநாதன் அர்ச்சுனா எம்பி கூறுகையில், “தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்திற்காக முதலமைச்சர் விஜய்க்கு […]

உலக செஸ் தலைவர் இலங்கை விஜயம்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய செஸ் (சதுரங்க) சாம்பியன்ஷிப் போட்டியின் முதன்மை விருந்தினராக அதன் ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்காக, உலக செஸ் கூட்டமைப்பின் (FIDE) தலைவர் அர்காடி டிவோர்கோவிச் (Arkady Dvorkovich) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தார். இப்பொதுநலவாய செஸ் போட்டி மே 16 ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரை 14 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 550 வீர வீராங்கனைகளின் பங்கேற்புடன் […]

வீட்டுத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதித் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் – ரவிகரன்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு அமைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியிலான வீட்டுத்திட்டங்களின் பெறுமதி அதிகரிக்கப்படவேண்டும் என தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் ரவிகரனின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்ற குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பது […]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடி ரூபா அபுதாபி வங்கிக்கு மாற்றம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்தின்போது, 8 கோடி ரூபாவுக்கும் அதிகளவிலான பணம் தவறான வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். துபாயில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தவேண்டிய மாதாந்த கொடுப்பனவே இவ்வாறு தவறுதலாக வேறொரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். செலுத்தப்படவேண்டிய வங்கி: எமிரேட்ஸ் என்.பி.டி வங்கிக் கணக்கு. தவறுதலாக செலுத்தப்பட்ட வங்கி: அபுதாபி இஸ்லாமிய வங்கிக் கணக்கு. இவ்வாறு தவறான கணக்குக்கு […]

நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (15.5.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, முள்ளிவாய்க்கால் பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றாரகள். அவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். […]

சுன்னாகம் – புத்தூர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

யாழ். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையில் அவசர மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதால் அந்த வீதி இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும். வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். அதன்படி, இன்று (16) காலை 7 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக வீதி மூடல் […]

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

நாட்டின் இரு வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (15) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசர பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் வெலிசர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் […]

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. அதனை இல்லாதொழிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான மாற்று வழியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் சிங்களப் புத்தாண்டுக்கான சுபநேரங்களை மாற்றியமைத்ததோடு, வெசாக் கொண்டாட்டங்களிலும் மாற்றங்களை உட்புகுத்தியுள்ளது. அத்துடன் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் நினைவுகூரும் விடயத்திலும் ஆர்வமின்மையை காட்டி […]

இலங்கையில் 12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்

இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் […]

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி; இருவர் உயிரிழப்பு

சிறிய ரக விமானமொன்று வீடொன்றின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின்க ஒஹியோ மாகாணத்தின் அக்ரான் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில் 2 பேர் பயணித்தனர். விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் நிலை தடுமாறி, அக்ரான் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளது. கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரிந்துள்ளது. […]