புரவி பிள்ளையார் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தி அஞ்சலி மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி […]
மொன்றியால் மதுபானசாலைகளில் சந்தித்த 4 பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு: காவல்துறை

மொன்றியால் (Montreal) மதுபானசாலைகளில் சந்தித்த நான்கு பெண்களுக்கு, அவர்களின் அனுமதியின்றி போதைப்பொருள் கொடுத்து, பின்னர் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக மொன்றியால் காவல்துறை தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் மற்றும் 2026 ஜனவரிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறும் காவல்துறை, குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த பெண்களை மொன்றியாலில் உள்ள பல்வேறு மதுபானசாலைகளில் (Bars) சந்தித்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. 29 வயதுடைய […]
நெடுஞ்சாலை 401 இல் விபத்து: எஸ்யூவி (SUV) வாகனத்தில் இருந்து வெளியேறிய மிசிசாகா பெண் மோதி பலி

எடோபிகோக் (Etobicoke) பகுதியில் நேரிட்ட விபத்தைத் தொடர்ந்து, ஒரு பெண்ணை அவசர மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எடோபிகோக் பகுதியில் உள்ள ‘நெடுஞ்சாலை 401’ இல் (Highway 401) நேரிட்ட கொடிய வாகன விபத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல மணி நேரம் கிழக்க நோக்கிய பாதைகள் (Eastbound lanes) மூடப்பட்டன. ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளிக்கிழமை […]
செட்டிக்குளத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது ஆண்டு நினைவஞ்சலியும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (16) செட்டிக்குளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன்போது ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ரயில் விபத்து : பின்னணியில் திருட்டா? சதிவேலையா? – தீவிர விசாரணை!

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தானது, இரும்புத் தகடுகள் திருடும் நோக்கில் கழற்றப்பட்டதா அல்லது இது ஒரு திட்டமிட்ட சதிவேலையா என்பது குறித்து விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பிரதான பாதையிலிருந்து திடக்கழிவு முனையத்துக்குச் செல்லும் தண்டவாள இணைப்புப் பகுதியில் இருந்த உலோகத் தகடுகள் அகற்றப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பேலியகொட […]
குற்றக் கும்பலைச் சேர்ந்த கம்பஹா ஒஸ்மண்ட்க்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறைக்குள், சட்டத்தரணி ஒருவரைப் போல் தோற்றமளித்து வந்த நபரொருவரால், சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை […]
தாய்லாந்தில் ரயில் மோதியதில் பேருந்தில் தீ விபத்து: குறைந்தது 8 பேர் பலி, 25 பேர் காயம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் (Bangkok) சனிக்கிழமையன்று நேரிட்ட ரயில் விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், பொதுப் பேருந்து ஒன்று தீக்கிரையானதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக மீட்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். பேருந்து மற்றும் அருகில் இருந்த வாகனங்களில் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒரு ரயில், பேருந்து, கார்கள் மற்றும் மோட்டார் […]
இறக்குமதி வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு 50% கூடுதல் கட்டணம் (Surcharge) விதிப்பு

இலங்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை (Customs Import Duty) மீது தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணத்தை (Surcharge) விதித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முக்கிய விபரங்கள்: சட்ட நடைமுறை: 1988ஆம் ஆண்டின் 83ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10 ஏ பிரிவின் கீழ் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரி […]
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சோகம் எம் உயிர் உள்ள வரை மறக்க முடியாதது – தமிழர் விடுதலைக் கூட்டணி

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது. அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான செ.சுதாகரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்கால் நினைவேந்தல் குறித்து இன்று (16) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தமிழர் வரலாற்றில் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சோகம் எம் உயிர் உள்ள வரை மறக்க முடியாததாகும். இன முரண்பாடுகள் உருவானதன் […]
அபாய எச்சரிக்கை நீடிப்பு
அத்தனகலு ஓயா வடிநிலப்பகுதியில் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.