எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. அதனை இல்லாதொழிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான மாற்று வழியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசாங்கம் சிங்களப் புத்தாண்டுக்கான சுபநேரங்களை மாற்றியமைத்ததோடு, வெசாக் கொண்டாட்டங்களிலும் மாற்றங்களை உட்புகுத்தியுள்ளது. அத்துடன் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் நினைவுகூரும் விடயத்திலும் ஆர்வமின்மையை காட்டி வருகிறது. அது குறித்த நிகழ்வு நடைபெறுமா இல்லையா என்ற நிலைப்பாடு தோன்றியுள்ளது.

கடந்த காலங்களில் தாம் நாட்டை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 224 ரூபாவாக காணப்பட்டது. கடந்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் நாம் மக்களுக்கு வெளிப்படையாக காணப்பட்டோம். ஆனால் இன்று 329 ரூபா வரை அதிகரித்துள்ளது. கடந்த கால ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வருவதாக கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வந்திருந்தால் ஏன் டொலரின் மதிப்பு குறையவில்லை.

மேலும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளில் தோல்வியடைந்துள்ளோடு, மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தவறியுள்ளனர். எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. அதளை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான மாற்று வழியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதாவது உண்மைகளை குறித்து ஆராயும் அமைப்பாக ஒரு பொதுவான எதிர்க்கட்சியாக அனைத்து தலைவர்களுடனும் பேசி நல்ல தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம்.

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் உண்மைகளை புரிந்து கொண்டு மக்கள் தமது கருத்துக்களை தைரியமாக முன்வைக்க வேண்டும். மக்களின் பணத்தில் இதுவரை 2.5 ரூபாய் வீணடிக்கப்பட்டது. எனவே பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஜனநாயகத்தை நசுக்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“எடப்பாடி பழனிசாமியால் ’லெட்டர் பேடு’ கட்சியாகிவிட்டது அதிமுக!” – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்!

October 10, 2026

சென்னை: அதிமுகவை ’லெட்டர் பேடு’ கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

HRykb0qbMAEcUI2

“இடைத்தேர்தலில் தவெக வெற்றி!” – வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து!

October 10, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித்

G_uhZrwaAAAcoJB

“இடைத்தேர்தல் வெற்றி தவெகவுக்கு மரண பயத்தைக் காட்டியுள்ளது!” – இபிஎஸ் காட்டம்!

October 10, 2026

சென்னை: தீர்ந்துபோன சக்தி என்று அதிமுகவை விமர்சித்தவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்