யாழ். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவையில் அவசர மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதால் அந்த வீதி இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.
வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
அதன்படி, இன்று (16) காலை 7 மணி முதல் நாளை (17) அதிகாலை 5 மணி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக வீதி மூடல் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, தேவையான அவசரப் பணிகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.