யாழ்.காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்பம்: காரைக்கால் பகுதியிலிருந்து சனிக்கிழமை கடற்றொழிலுக்குப் புறப்பட்ட மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். கைது: அந்தப் பகுதியில் சுற்றுக்காவல் (Patrolling) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக இவர்களைக் கைது செய்தனர். நடவடிக்கை: கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகு என்பன மேலதிக […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் குறித்து நீதிமன்றத் தீர்ப்பை நாட வேண்டும் – லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள ‘சூத்திரதாரி’ அல்லது மூளையாகச் செயல்பட்டவரை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட வேண்டும் என்று நேற்று தெரிவித்தார். அத்துடன், எவ்வித தலையீடுகளுமின்றி நீதித்துறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கிரியெல்ல குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்: நீதிமன்றத்தில் அறிக்கை: இந்த விசாரணை தொடர்பாக 25 பக்கங்களைக் கொண்ட […]
2028ல் நிலவின் தென்பகுதியில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டம்

10 நாட்கள் நிலவை ஆய்வு செய்த பிறகு, ஆர்டெமிஸ் 2 திட்ட வீரர்கள் அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர். இதன்படி, அரை நூற்றாண்டுகளுக்குப் பின் வீரர்கள் நிலவுக்கு வெற்றிகரமாக சென்று விட்டு திரும்பி சாதனை படைத்துள்ளனர். சுமார் 53 ஆண்டுகளுக்குப் பின் ஆர்டெமிஸ் 2 எனும் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் கடந்த 2ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து, நிலவுக்கு மிக அருகில், […]
ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகிய ஷாருக்கான்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகிவிட்டார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 5 நாட்கள் டேட்ஸ் ஒதுக்கிய நிலையில் தன்னால் நடிக்க முடியாத நிலை என்று கூறி விலகியிருக்கிறார். ரஜினியுடன் ஷாருக்கான் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. கூலி படத்தில் ஆமீர் கான் நடித்ததை அடுத்து ஷாருக்கான் நடிக்கிறார் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஷாருக்கான் […]
இசையமைப்பாளர் அனிருத் செய் உதவியைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கேட்காமலேயே தனக்கு செய்த பெரிய உதவி குறித்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதை கேட்டவர்களால் அனிருத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெற்றி பெற வேண்டி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று சென்று சாமி […]
ஜனநாயகனை லீக் எப்படி கண்டுபிடிப்பது? – ‘குறியீட்டு’ ஐடியா கொடுத்த இயக்குநர் மைக்கேல் அருண்

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு அரசியல் கட்சிகள் அல்ல மாறாக படக்குழுவின் அஜாக்கிரதை காரணம் என்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண். இல்லை என்றால் வேண்டுமென்றே லீக் செய்திருக்கலாம் என்கிறார். மேலும் அந்த நபரை கண்டுபிடிக்கும் வழியையும் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் என்பது தான் தற்போது சினிமா ரசிகர்கள் தீவிரமாக விவாதிக்கும் விஷயம். இந்நிலையில் ஒரு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பு சாட்டிலைட் கன்ட்ரோலில் இருக்கும் என்றும், அந்த சாட்டிலைட் பாஜக கன்ட்ரோலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தவெக நிர்வாகி […]
‘தேனிசைத்தென்றல்’ தேவா வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தீயோர் கூடம்’

‘விஸ்வாசம்’, ‘காலா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளரும், பின்னணிப்பாடகருமான ‘தேனிசைத் தென்றல் ‘ தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம் ‘ திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் , டேனியல் ஆனி போப், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் […]
யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த மாணவன்!

யாழ்ப்பாண நகர் பகுதியில் 16 வயது மாணவன் ஒருவன் தனது தங்கையின் தங்க மோதிரத்தைக் களவாடி, அதை விற்றுத் தனது காதலிக்கு ஐபோன் (iPhone) வாங்கிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தங்கைக்கு அண்மையில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவின் போது, உறவினர் ஒருவரால் அந்தத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. விழா முடிவில் மோதிரம் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், அந்த மாணவனின் காதலி (மாணவி) ஒரு புதிய ஐபோன் வைத்திருந்தது குறித்து […]
அமெரிக்காவின் கருத்தை நிராகரித்தது ஈரான்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் பயணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. […]
தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதி காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் மீட்க முன்வாருங்கள்

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதியில் உங்கள் காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் அனைவரும் அதனை மீட்க முன்வரவேண்டும் இல்லையேல் அந்த காணிகளை விடுவிப்பதற்கு இன்னுமொரு தசாப்தகாலமாகலாம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். உங்களிடம் உறுதியிருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது குறித்து மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. எங்களிடம் 17 பேருடைய உறுதிதான் உள்ளது 17 பேரால் மாத்திரம் காணிகளை அடையாளம் காணக்கூடிய நிலையுள்ளது. அந்த 17 பேருடைய எல்லைகளும் காண்பிக்கப்படுமிடத்து […]