முதல் வெற்றியைப் பெற்ற சென்னை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் சனிக்கிழமை (11) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது. சென்னை: 212/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் ஆ.இ 115 (56),ஆயூஷ் மாத்ரே 59 (36), ஷிவம் டுபே ஆ.இ 20 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகிஃப் நபி 0/17 [2], முகேஷ் குமார் 0/37 [4], அக்ஸர் பட்டேல் 1/39 [4], லுங்கி என்கிடி 0/41 [4]) டெல்லி: 189/10 (20 […]

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய குறித்த சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள அனுமதி

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி தொடர்பான மேலதிக […]

அளவுக்கதிகமான சட்டவிரோத கோரிக்கைகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் – ஈரான் அறிக்கை

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நிலை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகே (Esmaeil Baqaei) தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தப் பேச்சுவார்த்தைகளை “தீவிரமானவை” (Intensive) என்று விவரித்துள்ள பாகே, அதேவேளை, “தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் வெற்றி என்பது எதிர் தரப்பின் தீவிரத்தன்மை மற்றும் நன்மதிப்பைப் (Good faith) பொறுத்தே அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கான அழைப்பு: வாஷிங்டன் தனது “அதிகப்படியான கோரிக்கைகள் மற்றும் சட்டவிரோத […]

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ஹொரணை, மல்வானேகம பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

‘சர்வதேச ஒழுங்குமுறை சீர்குலைந்து வரும் நிலையில் அரசியலைத் தாண்டி ஒன்றிணைவோம்’ – மார்க் கார்னி

சர்வதேச ஒழுங்குமுறை சீர்குலைந்து வரும் நிலையில், கனடா ஒரு சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளதால், கனடியர்கள் தங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். மாண்ட்ரியலில் நடைபெற்ற லிபரல் கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் கார்னி இவ்வாறு குறிப்பிட்டார். கனடியர்கள் தற்போது எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய அச்சுறுத்தல்கள் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்தினார்: வேகமாக […]

ஒரே வாரத்தில் விபத்துக்களால் 49 பேர் பலி!

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு […]

பாரிய அளவிலான ஹெரோயினுடன் ஒருவர் கைது

புத்தல பகுதியில் அண்மைக் காலத்தில் மீட்கப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் பிடிபட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் தராசு என்பன மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் வெல்லவாய நீதவான் […]

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 7 பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர சிறைக்கு…

பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். நேற்று (11) குறித்த கைதிகள் வெலிசர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, லொகு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத் மற்றும் மன்னா ரமேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகள் உள்ளடங்குகின்றனர். பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்தவாறு இவர்கள் பல்வேறு […]

மேற்காசிய மோதலுக்கு முடிவு; ‘பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்’!

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் சென்றுள்ள, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசியுள்ளார். மேற்காசிய மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும் ஈரானும் முன்வந்தமையை அடுத்து அதற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான தூதுக்குழு நேற்று காலை இஸ்லாமாபாத் சென்றது. ஜே.டி.வான்ஸ் உடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உடன் […]