சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு; ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்?

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை லீக் செய்தது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கத்தில், சுமார் 500 கோடி ரூபா பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, […]
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகள் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளன. இந்தநிலையில், சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் வீடுகளில் இன்னும் சற்று நேரத்தில் குண்டுகள் வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், […]
கூட்டுறவு வைத்தியசாலையில் அமைதியின்மை

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியினர் மேற்கொண்ட முயற்சியால் நேற்று (11) பிற்பகல் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர். மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனத் கூறிக்கொண்ட ஒரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் சிகிச்சைக்காக […]
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அணு ஆயுத விவகாரமே முட்டுக்கட்டை

இஸ்லாமாபாத்தில் 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஈரானுடனான உடன்பாடு எட்டப்படாமல் போனதற்கான காரணங்களை விளக்கினார். “ஈரான் அணு ஆயுதத்தைப் பெற முயற்சிக்காது என்பதற்கும், அணு ஆயுதத்தை விரைவாக உருவாக்கக்கூடிய கருவிகளை நாடமாட்டார்கள் என்பதற்கும் ஒரு உறுதியான உறுதிப்பாட்டை (Affirmative commitment) நாங்கள் காண வேண்டும்,” என்று வான்ஸ் தெரிவித்தார். இது அதிபர் டிரம்பின் “முதன்மையான இலக்கு” என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச அணுசக்தி […]
பிரபல பாடகி ஆஷா போஸ்லே வைத்தியசாலையில் அனுமதி

புகழ்பெற்ற பொலிவுட் பாடகி ஆஷா போஸ்லே, இதய செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக இன்று மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இசையுலகின் மிகச்சிறந்த குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லே, ஏழு தசாப்தங்களுக்கும் மேலான கலைப்பயணத்தைக் கொண்டவர். தனது மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரின் நிழலில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், துணிச்சலான, கலகலப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தனது தனித்துவமான பாணியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். காதல் பாடல்கள், […]
ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், முதன்முறையாக இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவினால் அந்தப் பாதையிலுள்ள தடைகள் நீக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் இடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்காக ஈரானிய அதிகாரிகளுடன் எவ்வித ஒருங்கிணைப்பும் செய்யப்படவில்லை என அமெரிக்காவின் ‘ஆக்சியோஸ்’ செய்திச் சேவை […]
நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல்

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தற்போது முத்திரையிட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்தவை கொல்ல சதி நாடகம்?

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘தெமட்டகொட சமிந்த’ என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் என்பவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து தன்னை வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றுவதைத் தடுப்பதற்காக, சமிந்தவே இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்த […]
ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கை ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டுகளுக்கு பிரிவினைவாத வழக்கறிஞர் பதில்

பொது வாக்கெடுப்பு என்பது ‘ஆல்பர்ட்டா குடிமக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு தகவல் தொடர்பு செயல்முறை’ என்றும், இது ஒப்பந்த உரிமைகளை (Treaty Rights) ஒரு சிறு அளவுகூட பாதிக்காது என்றும் ஜெப்ரி ராத் (Jeffrey Rath) கூறியுள்ளார். ஆல்பர்ட்டா செழுமைத் திட்டத்தின் (Alberta Prosperity Project) வழக்கறிஞரான ஜெப்ரி ராத், ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கை தொடர்பான பொது வாக்கெடுப்பு மனு, பழங்குடியின மக்களின் ஒப்பந்த உரிமைகளை மீறுவதாக முன்வைக்கப்படும் வாதங்களை நிராகரித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மேற்கு […]
கன்சர்வேடிவ் கட்சி நெருக்கடி; தலைவர் போயலியேவ் அவசர கருத்துப்பகிர்வு

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் போயலியேவ் (Pierre Poilievre), தனது கட்சியைச் சேர்ந்த நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சிக்குத் தாவியதையடுத்து, தனது தலைமைத்துவம் குறித்த கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். தென்மேற்கு ஒன்டாரியோவின் (Sarnia-Lambton) நாடாளுமன்ற உறுப்பினர் மெர்லின் கிளாடு (Marilyn Gladu), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகி பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சியில் இணைவதாக அறிவித்தார். நவம்பர் மாதத்திலிருந்து கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகும் நான்காவது உறுப்பினர் இவராவார். தனது தலைமைத்துவம் […]