சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு; ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்?

நடிகர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படத்தை லீக் செய்​தது யார் என்​பது குறித்து சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வரும், தமிழ் திரை​யுல​கின் உச்ச நட்​சத்​திர​மு​மான விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்​கத்​தில், சுமார் 500 கோடி ரூபா பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இப்​படம், விஜய்​யின் திரைப்​பயணத்​தில் கடைசிப் படம் என்​ப​தால் உலகள​வில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பெரிய நட்​சத்​திர பட்​டாளமே நடித்​துள்​ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பொங்​கலுக்கு வெளி​யாக வேண்​டிய ​படம், எதிர்​பா​ராத தணிக்கை சிக்​கல்​களால் முடங்​கியது. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு​தணிக்​கைக் குழு இப்​படத்​தைப் பார்​வை​யிட்​டது. விரை​வில் சான்​றிதழ் கிடைத்து படம் திரைக்கு வரும் என்று ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்​தனர். இந்​நிலை​யில், படக்​குழு​வினருக்​கும் ரசிகர்​களுக்​கும் பேரிடி​யாக ஒரு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

தணிக்​கைச் சான்​றிதழுக்​காகக் காத்​திருக்​கும் சூழலில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப் பதிப்​பும் நேற்று முன்​தினம் அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாகக் கசிந்​தது. திரையரங்​கு​களில் வெளி​யா​வதற்கு முன்பே படம் கசிந்​த​தால் ஒட்​டுமொத்​தப் படக்​குழு​வும் கடும் அதிர்ச்​சி​யில் உறைந்​துள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் முன்​னாள் தலை​வர் கேயார், தமிழக டிஜிபி​யிடம் புகார் அளித்​தார்.

திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்ட மர்ம நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவர் வலி​யுறுத்​தி​யிருந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்​துள்ள சைபர் க்ரைம் பொலிஸார், ஐ.பி. முகவரி மற்​றும் டிஜிட்​டல் தடயங்​களை வைத்து பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்​தச் சட்​ட​விரோதச் செயலில் தனி​நபர்​கள் ஈடு​பட்டார்​களா, தொழில்​நுட்ப ரீதி​யாக படம் எங்கே இருந்து கசிந்​தது, தணிக்கை அலு​வல​கத்​துக்கு அனுப்​பப்​பட்ட நகலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்​பட்​டதா என்ற கோணத்​தில் விசா​ரணை நடக்​கிறது. விஜய் தற்​போது அரசி​யலில் கால்​ப​தித்​துள்ள நிலை​யில், இதற்​குப் பின்​னால் ஏதேனும் அரசி​யல் சதி இருக்​குமா என்​பது குறித்​தும் விசா​ரிக்​கப்​படு​வ​தாக பொலிஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. மேலும், படத்​தின் போஸ்ட் புரொடக்​சன் பணி​களில் ஈடு​பட்ட ஊழியர்​கள், தொழில்​நுட்​பக்​ கலைஞர்​கள்​ ஆகியோரிடம்​ வி​சா​ரணை நடத்த உள்​ளனர்​.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்