அமெரிக்க தூதுக்குழு குறித்த மேலதிக விபரங்கள் வெளியீடு

மெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பங்கேற்புடன் நேருக்கு நேர் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களும் முன்னதாக பிபிசியிடம் (BBC) இதையே தெரிவித்திருந்தன. அமெரிக்க தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் குறித்த மேலதிக விபரங்களை அந்த அதிகாரி வழங்கியுள்ளார். ஏற்கனவே செய்திகளில் வெளியானது போல, முக்கிய குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்: ஜே.டி. வேன்ஸ் (JD Vance) – துணை அதிபர் ஸ்டீவ் விட்காஃப் (Steve […]

ஈரான் மீது இராணுவ அழுத்தத்தைத் தொடருமாறு அமெரிக்காவிடம் ஈரானிய கனேடியர்கள் கோரிக்கை

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், சனிக்கிழமை ஒட்டாவாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் கடந்த 43 நாட்களாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். “ஈரான் மக்கள் இணைய முடக்கத்தின் கீழ் இருக்கும் 43-வது நாள் இன்று” என ‘ஈரான் ரிவைவல் ஹப்’ (Iran Revival Hub) அமைப்பின் இணை நிறுவனர் சூரெனா நூரி […]

கோண்டாவிலில் வாலிபர் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன் (27 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த இளைஞர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், இரவு உணவை உட்கொண்ட பின்னர் சுமார் […]

வலிகாமம் வடக்கு தையிட்டி தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி […]

QR முறைமை சில நாட்களுக்கு நீக்கம்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நேற்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக […]