இசையமைப்பாளர் அனிருத் செய் உதவியைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கேட்காமலேயே தனக்கு செய்த பெரிய உதவி குறித்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதை கேட்டவர்களால் அனிருத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெற்றி பெற வேண்டி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தானே செய்தாராம் நயன்தாரா. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி நிகழ்ச்சியில் தன் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் செய்த உதவி குறித்து பேசினார் விக்னேஷ் சிவன்.

நானும் ரௌடி தான் படத்தில் அனிருத்தை தான் ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் அன்பான இயக்குநர். ஆனால் அது நடக்காமல் போகவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்தார். நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டை புதுச்சேரியில் நடித்தினால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

படக் கதையை எழுத புதுச்சேரிக்கு கிளம்பியிருக்கிறார். அனி, நான் புதுச்சேரி போகிறேன் என்று அனிருத்தை சந்தித்து சொல்லிவிட்டு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்பொழுது விக்னேஷ் சிவனிடம் 250 ரூபாய் மட்டுமே இருந்தது. அது பேருந்து செலவுக்கு போய்விடும். புதுச்சேரியில் தங்க கையில் பணம் இல்லை. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் பேருந்தில் ஏறிவிட்டார். பணத்திற்கு என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் செல்போனில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.

எடுத்துப் பார்த்தால் அதை அனுப்பியவர் அனிருத். விக்கி, உங்க பையில் ரூ. 50 ஆயிரம் வைத்திருக்கிறேன் என்று அந்த மெசேஜில் இருந்திருக்கிறது. அதை பார்த்த விக்னேஷ் சிவனுக்கு அவரையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்திருக்கிறது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த விக்னேஷ் சிவன் விடாமல் அழுதிருக்கிறார். இதில் ஜன்னல் கம்பி எல்லாம் நனைந்திருக்கிறது. கையில் காசு இல்லையே என நினைக்கும்போது பெரிய தொகையை நண்பன் கொடுத்ததும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.

யாருக்கும் தெரியாமல் அனிருத் செய்த உதவியை பட விழா மேடையில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதை கேட்டு அனிருத், எனக்கு எதுவுமே தெரியாதே என்பது மாதிரி அமர்ந்திருந்தார். செலவுக்கு காசு இல்லாமல் தவிக்கும்போது செய்யும் உதவி இருக்கே, அதுவும் கேட்காமலேயே பணம் கொடுப்பது பெரிய விஷயம் அனிருத். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

அனிருத் தங்களின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று எத்தனையோ இயக்குநர்கள் ஆசைப்படும்போது அவர் தன் படங்களில் இசையமைப்பதில் சந்தோஷம் என்றார் விக்னேஷ் சிவன்.

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா