சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் – லக்மாலி ஹேமச்சந்திர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் போது, சிங்கங்களாகத் திரியும் எதிர்க்கட்சியினர் பூனைக்குட்டிகளாக மாறிவிடுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு பகிரங்கமாகக் கிண்டல் தொனியில் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது எதிர்க்கட்சியினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி சபையில் இல்லாத சந்தர்ப்பங்களில் சிங்கங்களைப் போலக் கர்ஜிக்கும் எதிர்க்கட்சியினர், அவர் சபைக்குள் நுழைந்ததும் அப்படியே […]
தேடப்படும் நபர்களுக்கு கடுமையாகும் சட்டம்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் சுமார் 20,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நடமாடும் பொலிஸ் ரோந்துப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த பாதுகாப்பு சேவைக்கு கூடுதலாக, வாகன விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் இரவும் பகலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு பாதுகாப்புப்படைகளும் ஆதரவளிக்கும் என்று இராணுவத்தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் […]
வரி நடைமுறைகளால் அரசுக்கு சாதகமான நிலை

சமகால அரசாங்கம் மேற்கொள்ளும் வரி நடைமுறைகளால் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், உள்நாட்டு வருவாய் திணைக்களம் 606,002 மில்லியன் ரூபாய் வரி வருவாயை வசூலித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், இது 17.7 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வருமான வரி, மதிப்புக்கூட்டு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி உள்ளிட்ட அனைத்து […]
கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்

சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தற்போது அதிகம் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (11.04.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்வலர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் […]
KKR அணியில் இணைய மதீஷ பத்திரணவுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அனுமதி

ஐபிஎல் 2026 தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபை (SLC) கட்டாய உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் இந்தியாவில் உள்ள கேகேஆர் அணியுடன் இணைவதற்கு தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டுள்ளது. பத்திரண ஏப்ரல் 17ஆம் திகதி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார். அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் […]
படித்த எங்களையே பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஆட்சியாளர்கள் ஏமாற்றுகிறார்கள் – கணேசன் அனிரன்

ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் (12.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் தெரியும் கடந்த ஆறு வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு […]
திரு நடராசா நிரூபன்

கண்டவளையை பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா நிரூபன் 09.04.2026 அன்று இயற்கை மரணம் எய்தினார் . அன்னார் காலஞ்சென்ற நடராசா கமலாதேவி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வள்ளியம்மை காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புத் பேரனும் சுலோஜினி , நாளாஜினி, காலஞ்சென்ற நிசாந்தன் ,நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் திருவாதிரை, காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஜதுசன்,தமிழிசை, நிதுஷா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சுஜித்தின் சித்தப்பாவுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2026 மதியம் […]
கழிவறையில் ஏற்பட்ட தாக்குதல்; ஹோமாகம தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு!

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிரிப்பிட்டிய – நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யசித் சத்துக்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த விருந்தகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அங்குள்ள கழிவறைக்குச் சென்ற மாணவிகள் சிலரைத் தொடர்ந்து […]
பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

தமிழ் உட்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த தென்னிந்திய பாடகி ஆஷா போஸ்லே தனது 92ஆவது வயதில் காலமானார். நேற்று (11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஷா போஸ்லே நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்தததாக தெரிவிக்கப்படுகின்றது. பஜனைகள் முதல் கேபரே பாடல்கள் வரை, அனைத்து வகையான பாடல்களையும் பாடியுள்ளார். 1933ஆம் ஆண்டு […]
அன்னை பூபதியின் ஊர்தி மறிக்கப்பட்டமை குறித்து பொலிஸார் விளக்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தியினைப் பொலிஸார் மறித்தமை தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம் அளித்துள்ளார். நினைவு ஊர்திப் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தில் அது தடுக்கப்படவில்லை என்றும், சாதாரண சோதனை நடவடிக்கைக்காகவே (Security check) மறிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையான முன் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டினர். பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி […]