சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க லிபரல் கட்சி தீர்மானம்

கனடியர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தகுதியுள்ள வயதை 16 ஆக நிர்ணயிப்பதற்கு ஆதரவாக ஃபெடரல் லிபரல் கட்சியினர் வாக்களித்துள்ளனர். சனிக்கிழமை காலை நடைபெற்ற கட்சி மாநாட்டில், இந்தத் தடையை நடைமுறைப்படுத்தவும், அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பை சமூக ஊடக நிறுவனங்கள் மீதே சுமத்தவும் கோரும் பிணைப்பற்ற (Non-binding) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த யோசனையைத் தனது கட்சிக்குழுவிடம் முன்வைத்து, மாநாட்டிலும் அதனை முன்னெடுத்த கியூபெக் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் பெண்டயன் (Rachel Bendayan), நீண்ட நேர சமூக ஊடகப் […]
வௌிநாட்டு பெண் கட்டுநாயக்கவில் கைது
தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து புறப்பட்டு, […]
நாளை அதிக வெப்பம்!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்ப நிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (12) பிற்பகல் 3.30 மணிக்கு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பாவனையில் கவனம்!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாங்கள் வீட்டில் இல்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவது திருடர்களுக்குச் சாதகமாக அமையும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனவே, சுற்றுப்பயண அனுபவங்களை மீண்டும் வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு […]
பாலத்திலிருந்து லொறி வீழ்ந்து விபத்து: இருவர் பலி

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த லொறி ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது […]
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்க தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பிரேரணை

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பிரேரணையில், இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளின் […]
யாழ்.நாகர்கோவில் கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர முக்குளிப்பில் (Diving) ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 6 சந்தேகநபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 939 கடல் அட்டைகள், 2 டிங்கி படகுகள் மற்றும் முக்குளிப்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]
திரு இராஜசேகரம் சபாரத்தினம்

யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜசேகரம் சபாரத்தினம் அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை நிக்கோலஸ், பேபிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிரியா, பிரென்ட்ரா, அலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், இரத்தினசிகாமணி, ஜெயரட்ணம்(ஐயாத்துரை), துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராதாமணி, இரவீந்திரன், இராஜேந்திரன்(இந்திரன்) […]
விசேட அதிரடிப்படை வீரர் உட்பட ஆறு பேர் கைது
மட்டக்களப்பு – கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் யூ மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்யூ உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி உட்பட மேலும் இருவரை நேற்று சனிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட […]