யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தியினைப் பொலிஸார் மறித்தமை தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நினைவு ஊர்திப் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தில் அது தடுக்கப்படவில்லை என்றும், சாதாரண சோதனை நடவடிக்கைக்காகவே (Security check) மறிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையான முன் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு மீண்டும் தனது பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.