உலகளாவிய போர்ச்சூழல்; விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் அவசியம் – சஜித் பிரேமதாச

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் பொருட்டு வலுச்சக்தி அமைச்சரிடமிருந்து சில விடயங்கள் தொடர்பில் விரிவான பதில்களை எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் . தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்காக முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேட அம்சமாகும். […]

டொனால்ட் டிரம்ப்பின் செய்தியாளர் சந்திப்பில் வெளியான 10 முக்கிய அம்சங்கள்

டிரம்ப், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் சிஐஏ (CIA) இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோருடன் இணைந்து நடத்திய இந்தச் சந்திப்பில், ஈரான் மீதான அடுத்தகட்ட இராணுவ நகர்வுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். ஈரான் நாட்டை ஒரே இரவில் நிர்மூலமாக்க முடியும் என்று டிரம்ப் எச்சரித்தார். நாளை நள்ளிரவுக்குள் ஈரானின் அனைத்துப் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்கா இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2. அமெரிக்க விமானிகள் மீட்பு […]

ஏப்ரல் நடுப்பகுதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்!

இலங்கையில் நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் மசகு எண்ணெய் விலை உயர்வுக்குத் தீர்வாக, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான அரசியல் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ‘டாஸ்’ (TASS) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், இந்தத் திட்டம் குறித்த அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மட்டத்திலான முடிவுகள் […]

“கனடாவில் உள்ள எமது முகவர்கள் ஆயுதங்களை ஏந்துவதில்லை” – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம்

கனடாவில் நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது அமெரிக்க அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கமுகவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், கனடிய மண்ணில் தமக்கு எவ்விதமான சட்ட அமலாக்க அதிகாரமும் இல்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. கனடாவில் ஒட்டாவா, ரொறன்ரோ, வன்கூவர், கல்கரி மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் ICE அலுவலகங்கள் உள்ளன. அங்குள்ள எமது முகவர்கள் எவரும் துப்பாக்கிகளை (Firearms) வைத்திருப்பதில்லை என்று அந்த […]

அழியும் அபாயத்தில் நல்லூர் மந்திரிமனை – சி.வீ.கே. சிவஞானம்

யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான வரலாற்றுத் தொல்பொருள் சின்னங்களில் ஒன்றான நல்லூர் மந்திரி மனை மிக வேகமாக அழிவடைந்து வருவதாகவும், அதனைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மழைக்காலத்தின் போது மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாண தமிழ் மன்னர்களின் எஞ்சியிருக்கும் ஒரேயொரு வரலாற்றுச் சின்னம் இவ்வாறு கண் முன்னே அழிந்து போவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். […]

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிப் படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய QR கொடுப்பனவு; ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அத்துடன், இந்த முறைமையை மக்களுக்கு மிகவும் […]

விண்வெளி வீரர்கள் வரலாற்றுச் சாதனை!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் இணைந்துள்ள விண்வெளி வீரர்கள், மனித வரலாற்றில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அதிகூடிய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம், 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்பல்லோ 13 (Apollo 13) விண்கலத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர். ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நேற்று (06) சந்திரனின் மிகவும் தொலைதூரப் பகுதிக்குச் சென்றதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இதன்போது, அவர்கள் பூமியிலிருந்து […]