100 பில்லியன் செலவில் மெகா நிவாரணப் பொதி – ஜனாதிபதி அறிவிப்பு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் மற்றும் உர மானியங்களில் விசேட அதிகரிப்புகளை சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில், இன்று (07) விசேட பொதியை அறிவித்த ஜனாதிபதி ஏப்ரல் மாதத்திற்காக மட்டும் அஸ்வெசும பயனாளர்களின் உதவித்தொகை பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது: இதுவரை 17,500 ரூபாயாக இருந்த உதவித்தொகை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10,000 […]
காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டுத் யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய லூனா டூகாட் எனும் இந்தத் யுவதி ஒரு பல்கலைக்கழக மாணவியாவார். அவர் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்து, ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி கற்று வருகின்றார். இதற்கிடையில், கல்விசார் ஆய்வுப் பணிக்காக […]
மருதனார்மடம் – பூவாடையில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள் எட்டிப் பார்த்தபோது, அங்கு ஆண் ஒருவரின் சடலம் நீரில் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கவனித்துள்ளார். இது குறித்து அவர் […]
பொருளாதார மத்திய நிலையத்தில் சுற்றிவளைப்பு
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் 2 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை மற்றும் அதனைச் சூழவுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்தி இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிலரிடமிருந்து கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் […]
ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் நேரடி எச்சரிக்கை!

ஈரானில் உள்ள பொதுமக்கள் இன்று ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய நேரப்படி இன்று இரவு 21:00 மணி வரை நாடு முழுவதும் ரயில்களைப் பயன்படுத்துவதையோ அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் செல்வதையோ தவிர்க்குமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. “ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என இஸ்ரேல் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பார்சி மொழி சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே […]
ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்; ஸஹ்ரானுக்குப் பின்னால் யாரோ ஒரு சூத்திரதாரி இருக்கிறார்?

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் பின்னணியில், ஸஹ்ரான் ஹாஷிமிற்கு மேல் ஒரு சூத்திரதாரி (Mastermind) இருந்தே தீரவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் கருத்து தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் ஸஹ்ரான் ஹாஷிம் தான் எனத் தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தே தற்போது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இது […]
இலங்கையில் திட்டமிடப்படாத மின்வெட்டு எதுவும் இல்லை!
இலங்கையில் திட்டமிடப்படாத அல்லது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் முற்றாக நிராகரித்தார். ஒருவேளை திட்டமிட்ட மின்வெட்டுகளை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். தொழில்நுட்பக் கோளாறுகள்: சில பகுதிகளில் ஏற்படும் மின்சாரத் தடைகள் மின்வெட்டு அல்ல, அவை திடீர் தொழில்நுட்பக் கோளாறுகள் (Breakdowns) மட்டுமே. இவ்வாறான கோளாறுகள் கண்டறியப்பட்டவுடன் மின்சாரத்தை விரைவாக […]
விசேட அறிவிப்பை வெளியிடுகிறார் ஜனாதிபதி!
த்திய கிழக்கு போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்குவது குறித்த அதிரடி அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார். நிவாரணப் பொதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்: மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் இதர பொருளாதாரத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழுக்களுக்குச் சிறப்பு நிவாரணப் பொதியை வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று காலை உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் […]
திரு பாலசுப்ரமணியம் கந்தையா

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Wijdenes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்ரமணியம் கந்தையா அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், இரஞ்சிதமலர்(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், இராசமணி, சண்முகநாதன், சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மேகலா, திருமகள்(மேனகா), கோபிநாத், பானுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருபா, காண்டீபன், கிறிஸ்ரியான் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருஸ்ணா, […]
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 23 குற்றவாளிகள் அடையாளம்!
நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வந்ததாகவும், இது அனைவரும் அறிந்த ஒரு பகிரங்க ரகசியம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். […]