1.4 கோடி ஈரானியர்கள் உயிர் தியாகம் செய்யத் தயார் – ஈரான் அதிபர்

தேசத்தைப் பாதுகாக்க ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

சட்டப்பேரவைத் தேர்தல்; ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் மனுக்கள் ஏற்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் பழனிசாமி, காரைக்குடியில் சீமான், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் முதல்​வர் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவி கேள்விக்குறியாகிறது?

ஈரான் மீதான போரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடு மற்றும் அவர் தெரிவித்து வரும் கருத்துகளை அடுத்து, அவரை பதவி நீக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, அந்நாட்டு செனட் சபையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும்படி, ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பல முறை வலியுறுத்தியுள்ளார். இதற்காக கொடுத்த அவகாசத்தை அவர் தொடர்ந்து நீட்டித்து வருகிறார். இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதியாக செவ்வாய்க்கிழமை (07) […]

துருக்கியில் பதற்றம்: இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலியதுணைதூதரகத்திற்கு அருகாமையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறையினரும் படுகாயமடைந்துள்ளதாகத் துருக்கியின் உத்தியோகபூர்வ அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உயிரிழந்தவர்கள் யார் அல்லது தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை துருக்கி அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு: தாக்குதலைத் […]

மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவை: பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வு ஆரம்பம்!

பல தசாப்தங்களாகக் காத்திருக்கும் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளை (Pre-feasibility study) அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இக் கப்பல் சேவைக்கான பூர்வாங்க ஆய்வுகளை நடத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், தற்போது அந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் நடவடிக்கை: இந்த ஆய்வுகளின் முடிவுகள் சாதகமாக அமையும் பட்சத்தில், இரு […]

பத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தபடி தமிழ் அரசியல் கைதிகள் பத்துபேரையும் ஜனாதிபதி உடனடியாக நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்யவேண்டும் என 300க்கும் மேற்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்களும் தனிநபர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் ஒன்றாகும். அவசரகாலச் […]

மிலனை வென்ற நடப்புச் சம்பியன்கள்

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி வென்றது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ பொலிட்டானோ பெற்றிருந்தார். சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 65 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும் 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 58 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் கொமோவும் காணப்படுகின்றன.

ஈரானில் பாதுகாப்பு படைகள் வழங்கியுள்ள அவசர எச்சரிக்கை

ஈரானில் உள்ள மக்கள் இன்று தொடருந்தில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பான பதிவொன்றில் ஈரானில் உள்ள மக்கள் “உங்கள் பாதுகாப்பிற்காக” நாடு முழுவதும் “ஈரான் நேரப்படி இரவு 9 மணி வரை” தொடருந்தை பயன்படுத்துவதையும் அதில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்பு படைகள் கூறியுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் தொடருந்துகளிலும் தொடருந்து பாதைகளுக்கு அருகிலும் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை […]

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(07.04.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று(07) அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி […]

இன்று கூடுகிறது விசேட நாடாளுமன்றச் செயற்குழு!

நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழு இன்று (07) மீண்டும் கூடவுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத் தலைமை: வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள குழு அறை 08-இல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிகாரிகள் முன்னிலை: இன்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை […]