துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலியதுணைதூதரகத்திற்கு அருகாமையில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறையினரும் படுகாயமடைந்துள்ளதாகத் துருக்கியின் உத்தியோகபூர்வ அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உயிரிழப்புகள் குறித்த முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உயிரிழந்தவர்கள் யார் அல்லது தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை துருக்கி அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு: தாக்குதலைத் தொடர்ந்து தூதரகப் பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.