“கனடாவில் உள்ள எமது முகவர்கள் ஆயுதங்களை ஏந்துவதில்லை” – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம்

கனடாவில் நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது அமெரிக்க

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கமுகவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், கனடிய மண்ணில் தமக்கு எவ்விதமான சட்ட அமலாக்க அதிகாரமும் இல்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

கனடாவில் ஒட்டாவா, ரொறன்ரோ, வன்கூவர், கல்கரி மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் ICE அலுவலகங்கள் உள்ளன. அங்குள்ள எமது முகவர்கள் எவரும் துப்பாக்கிகளை (Firearms) வைத்திருப்பதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடிய மண்ணில் கைதுகளை மேற்கொள்வதற்கோ அல்லது தேடுதல் கட்டளைகளை (Search Warrants) நிறைவேற்றுவதற்கோ ICE முகவர்களுக்கு அதிகாரம் கிடையாது. “கனடாவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு கனடிய காவல்துறையினரே முழுப் பொறுப்பு” என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் ஊடகப் பேச்சாளர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ICE முகவர்கள் தற்போது போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான விசாரணைகளில் மட்டுமே கனடியப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மாநகர சபைகளின் தீர்மானம்: ரொறன்ரோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) மற்றும் வன்கூவர் மாநகர சபை உறுப்பினர்கள், உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ICE முகவர்கள் நகருக்குள் நுழைவதை எதிர்த்துத் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச்சபை எச்சரிக்கை: ICE முகவர்களின் வருகை புலம்பெயர்ந்த சமூகத்தினர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் (Chilling effect) நடுக்கத்தையும் உருவாக்கும் எனசர்வதேச மன்னிப்புச்சபை  எச்சரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, ICE காவலில் பலர் உயிரிழந்துள்ளதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2026 உலகக்கிண்ணப் போட்டிகளை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் கனடாவின் ரொறன்ரோ மற்றும் வன்கூவர் நகரங்களில் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது ICE பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தமையே தற்போது கனடாவிலும் இத்தகைய அச்சம் எழக் காரணமாகியுள்ளது.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்