உலகளாவிய போர்ச்சூழல்; விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் அவசியம் – சஜித் பிரேமதாச

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் பொருட்டு வலுச்சக்தி அமைச்சரிடமிருந்து சில விடயங்கள் தொடர்பில் விரிவான பதில்களை எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் முன்வைத்த கேள்விகளாவன,

இந்நாட்டிற்கு எரிபொருட்களை இறக்குமதி செய்து, கப்பலிலிருந்து இறக்கும் நிலை வரையிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை வரையிலும் ஏற்படும் செலவு ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாகவும் எவ்வளவு? அந்த செலவு தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்குச் சமமான விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் காலங்களில் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை நீங்கள் வழங்கினீர்கள். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு சமமான விலையில் எரிபொருட்களை இன்னும் கூட வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரி வகைகள் மற்றும் அவற்றின் அளவுகளும் ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரம் யாது? அவ்வாறெனில், எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் விலைகள் கணக்கிடப்படும் விதம் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

நடைமுறையில் காணப்படும் எரிபொருள் விலை சூத்திரத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என நீங்கள் தேர்தல் காலங்களில் பிரஸ்தாபித்திருந்தீர்கள். அவ்வாறே இந்த விலை சூத்திரத்தை மாற்றியமைத்து மக்கள் நலன் சார்ந்த, மக்களுக்கு சார்பான விலை சூத்திரமொன்றை முன்வைப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். அவ்வாறாயின் அவ்வாறு கூறிய மக்களுக்கு சார்பான விலை சூத்திரத்தை முன்வைக்க முடியாமைக்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

இந்நாட்டின் மொத்த நுகர்வுக்குத் தேவையான மதிப்பிடப்பட்ட எரிபொருட்களின் (கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி (Lubricant) மற்றும் விமான எரிபொருள்) அளவுகள் மாதாந்த அடிப்படையிலும் வருடாந்த அடிப்படையிலும் எவ்வளவாக அமைந்து காணப்படுகின்றன? கடந்த மூன்று (03) மாதங்களில் மாதாந்தம் விநியோகிக்கப்பட்ட மேற்கண்ட எரிபொருள் வகைகள் மெட்ரிக் டொன் அடிப்படையில் எவ்வளவு? இந்த காலகட்டத்தில் எரிபொருள் வகைகளுக்கு ஏற்ப பதிவான நுகர்வுகளின் அளவுகள் யாவை?

2026 ஜனவரி முதல் மார்ச் வரை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிபொருட்களின் அளவு, கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி மற்றும் விமான எரிபொருள் என்றடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு? இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல் வாரியாக (shipment-wise) எவ்வளவு ? குறித்த கப்பல்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த திகதிகள் யாவை ? அந்த எரிபொருட்கள் முதுராஜவல மற்றும் கொழும்பு சேமிப்பு களஞ்சிய முனைய வளாகங்களில் இறக்கப்பட்ட அளவுகளை தனித்தனியாக தெரிவிக்க முடியுமா?

இந்நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் வகைகளில் (பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி, விமான எரிபொருள்) சுத்திகரிக்கப்பட்டு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? கச்சா எண்ணெயாக இறக்குமதி செய்து இந்நாட்டிலேயே சுத்திகரித்து வழங்கப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொள்ளப்படும் மொத்த எரிபொருள் இறக்குமதிகள் (refined imports) மற்றும் உள்நாட்டு சுத்திகரிப்பு மூலம் வழங்கப்படும் அளவுகள் தனித்தனியாக எவ்வளவு?

இந்நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்புச் செய்வதன் தற்போதைய நிலை தொடர்பாக, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய இயல் திறன் (capacity) மற்றும் பயன்படுத்தப்படும் உண்மையான அளவு (utilization) எவ்வளவு? இந்த சுத்திகரிப்பு நிலையம் முழு இயல் திறனில் இயங்காவிட்டால், அதற்கான காரணங்கள் யாவை?

அரசாங்கம் இதுவரை கொள்வனவு செய்துள்ள மொத்த எரிபொருட்களின் அளவு எவ்வளவு? இந்த கொள்வனவு வழங்கல்களை மேற்கொள்வதற்கு பொறுப்பெடுத்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் குறித்த நிறுவனங்கள் யாவை? கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களுக்காக இணக்கம் கண்டுள்ள பிரீமியம் (premium) அளவுகள் யாவை? இதுவரை இறக்குமதி செய்யப்ட்ட எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்திய பிரீமியம் அளவுகள் யாவை?

எண்ணெய் விலைகளின் அதிகரிப்புக்கு மத்தியிலும் போர்த்துகல், ஸ்பெயின், துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, இத்தாலி, ஜெர்மன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்களுக்காக விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. சேமித்து வைத்துள்ள மேலதிக கையிருப்புப் பணத்தை, தொழிலாள வர்க்கத்தினருக்கும், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு