மாற்றுத்திறனாளி வீராங்கனையின் விழிப்புணர்வுச் செயற்பாடு!

“பார்வை ஒரு தடையல்ல” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடற்பகுதியை, ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். காராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே – அருணா தம்பதியினரின் மகளான ஈஸ்வரி (17), தற்போது 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிறவியிலேயே முழுமையாகப் பார்வையற்றவராக இருந்தபோதிலும், தனது விடாமுயற்சியால் தேசிய அளவிலான பாரா […]

கனடாவை இணைக்கும் எண்ணத்தைக் கைவிட்டாரா டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவின் எல்லைப் பகுதிகளை அமெரிக்காவுடன் இணைப்பதில் (Annexation) மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் பிரித்தானிய மன்னர் கிங் சார்லஸ் மீது அவர் கொண்டுள்ள மரியாதையே அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக முடக்கியிருக்கலாம் என்றும் அரச குடும்ப விவகார ஆய்வாளர் ராபர்ட் ஹார்ட்மேன் (Robert Hardman) தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எல்லை குறித்த அதிருப்தி: “யாரோ ஒரு நபர் எல்லையை ஒரு நேர்க்கோடாக வரைந்துவிட்டார். அந்தப் கோட்டை இன்னும் 50 மைல்கள் வடக்கே […]

இவ்வாண்டு 676 வீதி விபத்துக்களில் 706 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை (6) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக […]

அடுத்த 3 மாதங்களுக்கு மேல் மத்திய கிழக்கு போர் நீடித்தால் ஒப்பந்த திருத்தம் அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் […]

4,620 லீற்றர் டீசல் பறிமுதல்

கல்முனை மாதவன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 பீப்பாய்களில் அடைக்கப்பட்ட 4,620 லீற்றர் டீசலை கல்முனை தலைமையகப் பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட டீசல் கையிருப்பின் பெறுமதி 1,764,820 ரூபாய் என கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் நிலவும் வெப்பச்சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 8,000 வோக்ஸ்வாகன் கார்களைத் திரும்பப் பெற உத்தரவு!

மென்பொருள் கோளாறு காரணமாகக் கனடா முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட வோக்ஸ்வாகன் ரக கார்களைத் திரும்பப் பெறுவதாக (Recall) கனடா போக்குவரத்துத் திணைக்களம் (Transport Canada) அறிவித்துள்ளது. வோக்ஸ்வாகன் ஜெட்டா (Volkswagen Jetta) – 2025 மாடல் வோக்ஸ்வாகன் டாஸ் (Volkswagen Taos) – 2025 மாடல் மென்பொருள் கோளாறு: காரை ஸ்டார்ட் செய்யும் போது, அதன் உட்புறக் கருவித் தொகுப்பு (Instrument Cluster) வேலை செய்யாமல் போகலாம். இதனால் வேகம் (Speedometer), கியர் மாற்றக் குறிகாட்டிகள், எச்சரிக்கை […]

விமான எரிபொருள் விலை உயர்வு: கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது வெஸ்ட்ஜெட்!

ஈரான் மீதான போர் மற்றும் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, விமான எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனம் புதிய கூடுதல் கட்டணங்களை (Surcharge) அறிவித்துள்ளதுடன், சில விமான சேவைகளை ஒன்றிணைத்துள்ளது. வரும் புதன்கிழமைக்குப் பிறகு ‘கம்பேனியன் வவுச்சர்களை’ (Companion vouchers) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு தற்காலிகமாக 60 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். போதிய கேள்வியற்ற (Lower demand) வழித்தடங்களில் விமான சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 1 […]

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான்!

ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் நேற்று(06) ஆலோசித்தன. இதன்போது, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தற்காலிக போர்நிறுத்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) விரைவாகத் திறக்கக் கோரும் அழுத்தங்களுக்கு ஈரான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெஹ்ரான் கூறியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து, பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளது. அதில் தற்காலிக போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதுடன், […]

புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழியில் நிதி மோசடிகள், தரவுத் திருட்டு போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மக்களின் பணம் மற்றும் உணர்திறன் மிக்க தகவல்களை மோசடியாகப் பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொருளாதார கஷ்டங்கள் மற்றும் உடனடி நிதி லாபங்களை எதிர்பார்க்கும் நபர்கள், இவ்வாறான மோசடி முறைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாக கடந்த காலங்களில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளதாக […]