380,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் படுக்கை விரிப்பு என்ற பெயரில் கடத்தல்

இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 3,380,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கைப்பற்றுவதற்கு இலங்கைச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றினைப் பரிசோதித்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றே இவ்வாறு பரிசோதிக்கப்பட்டது. அக்கொள்கலனின் ஆவணங்களில் ‘படுக்கை விரிப்புகள்’ (Bed sheets) எனத் தெரிவித்து இந்தச் சிகரெட் கையிருப்பு கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தச் சட்டவிரோத சிகரெட்டுகளின் மொத்தப் பெறுமதி 507 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், […]
சுப்பர் டீசலின் விலையும் உயர்ந்தது!

சினோபெக் நிறுவனம் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசலின் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 572 ரூபாயாக காணப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 600 ரூபாவாகும். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் […]