இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பாகும் . தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்காக முதல்முறையாக டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டமை இதன் விசேட அம்சமாகும்.

அதன்படி, 15,000 டெப்லெட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம் தரவுச் சேகரிப்பை விரைவுபடுத்தவும், பிழைகளைக் குறைக்கவும், பெறப்பட்ட தரவுகளை நேரடியாகத் திணைக்களத்தின் சேர்வர் கணினிகளுக்குப் பதிவேற்றவும் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயாரிப்புப் பணிகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான தரவுச் சேகரிப்புச் செயற்பாடான இந்தத் தேசிய தொகை மதிப்பு , தொகை மதிப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில், மாவட்ட நிர்வாகத்தின் மேற் பார்வையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர்கல்வி பயில்வோர் உள்ளிட்ட விசேட பயிற்சி பெற்ற பெருமளவிலானோர் இந்தப் பணியில் இணைந்துகொண்டனர். இந்த தொகை மதிப்பு ‘தொகைமதிப்புத் தருணமாக’ 2024 டிசம்பர் 19-ஆம் திகதி நள்ளிரவு (00:00 மணி) கருதப்பட்டது.

இலங்கையின் சனத் தொகை, அதன் வளர்ச்சி, மாவட்ட ரீதியான மக்கள் பரம்பல் மற்றும் மக்கள் வசிக்கும் வீட்டு அலகுகள் குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டின் மக்கள் தொகைக் கட்டமைப்பு, வீடமைப்பு நிலைமை, சமூக-பொருளாதாரப் பண்புகள் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறித்த விரிவான தரவுகளை வழங்கும் அடிப்படைத் தேசிய ஆவணமாக இது கருதப்படுகிறது. இந்தத் தரவுகள் இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் மிகவும் அவசியமானவை.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக முன்னைய தொகை மதிப்புகளை விடவும் பரந்த அளவிலான தகவல்களைச் சேகரிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் மிகவும் விரிவான பகுப்பாய்வு கொண்ட அறிக்கையைத் தயாரிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, திறைசேரியின் மேலதிக செயலாளர் ஹிமாலி புள்ளேபெரும, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் வாசனா ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.