ஈரான் – அமெரிக்கா மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளன – ரொயிட்டர்ஸ்

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது. இது நேற்றிரவு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முதலில் […]
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நபர் ஒருவர் தமது விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே, மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக மின்சார வேலிகளை அமைத்த 56 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகளாவிய சுதந்திர சரிவு: 2025 இல் முன்னேற்றம் கண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று!

உலகளவில் ஜனநாயக சுதந்திரம் தொடர்ந்து 20 வது ஆண்டாக சரிவைச் சந்தித்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ‘Freedom in the World 2026’ அறிக்கையின்படி, இலங்கை 5 புள்ளிகளைப் பெற்று முன்னேறியுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்த முன்னேற்றங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மத சகிப்புத்தன்மையை மேம்படுத்த புதிய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. […]
ட்ரம்ப்பின் கிறிஸ்தவப் பண்பு குறித்து கர்தினால் கேள்வி!
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர்ச் சூழலைக் குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடுகளை கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக விமர்சித்துள்ளார். உலகையே ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் சுயநலத்தால் இன்று அனைத்து நாடுகளும் அவதிப்பட்டு வருவதாக கர்தினால் தெரிவித்தார். “உலகின் மிக முக்கியமான நாட்டின் தலைவராக இருக்கும் இவர் அண்டை நாடுகளின் மீது குண்டுகளை வீசி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறார்” என்று அவர் குறிப்பிட்டார். “அவர் தன்னை […]
தேசிய அபிவிருத்தி வங்கிமோசடி: 13.2 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) தனது நிறுவனத்திற்குள் இடம்பெற்ற உள்வாரி மோசடியின் அளவு சுமார் 13.2 பில்லியன் இலங்கை ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது முன்னைய மதிப்பீடுகளை விட மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் பாதிப்பில்லை: இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பிரிவுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகள் (Customer balances) இதனால் பாதிக்கப்படவில்லை என்றும் வங்கி உறுதி அளித்துள்ளது. மத்திய வங்கியின் தலையீடு: இலங்கை மத்திய வங்கி (CBSL), […]
சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) உத்தரவிட்டுள்ளது. 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலக்கெடு: இந்த விசாரணை […]
எரிபொருள் தாங்கிய கப்பல் சீனாவிலிருந்து இலங்கை வருகின்றது!

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று(06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி தங்கேஸ்வரன் நிர்மலாதேவி

யாழ். அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கேஸ்வரன் நிர்மலாதேவி அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தங்கேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும், அருள்குமரன்(லண்டன்), பார்த்திபன்(லண்டன்), பிரியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யோகேந்திரராஜா(லண்டன்), காலஞ்சென்ற புவனேந்திரன், றஞ்சினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுதர்சேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தமயந்தி(டென்மார்க்), சுகந்தி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், காலஞ்சென்ற […]
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அமெரிக்க இரகசிய சேவை (US Secret Service) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12:00 மணிக்குப் பிறகு). வெள்ளை மாளிகைக்கு வடக்கே அமைந்துள்ள லாஃபாயெட் பூங்கா (Lafayette Park) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் […]
தேசிய கியூ.ஆர் கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!
சமூகம் திறமையான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான ஊக்கத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் “தேசிய கியூ.ஆர் கொடுப்பனவு விழிப்புணர்வு திட்டத்தை” ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், நாடாக நாம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்குள் நுழைய வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். முறைசாரா பொருளாதாரத்தை முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே […]