மேன்முறையீட்டு நீதிமன்றில் சுரேஷ் சலே மனு தாக்கல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக சுரேஷ் சலே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன,ரோஹான் […]
நிலக்கரி ஊழல் மற்றும் கொள்கலன் மோசடி குறித்து அர்ச்சுனா சர்வதேச நாணய நிதியத்திடம் முறைப்பாடு

இலங்கையில் நிலவும் ஊழல்களை ஒழிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தலையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த IMF தூதுக்குழுவினரை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் சந்தித்தனர். இதில் ரவி கருணாநாயக்க மற்றும் திலித் ஜயவீர ஆகியோருடன் எம்.பி அர்ச்சுனாவும் கலந்துகொண்டார். முன்வைக்கப்பட்ட புகார்கள்: * சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு மோசடி (Coal purchase scam) குறித்து அவர் விரிவாக விளக்கினார். முறையான அனுமதி நடைமுறைகளைப் […]
மட்டு.வாகரை மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம், வாகரைப் பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி உரிமை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். வாகரைப் பிரதேசத்தில் உள்ள பல காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ளதால், மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் காணி ஆவணங்களைப் பரிசீலித்ததுடன், இந்தப் […]
புதுக்குடியிருப்பு”வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமை

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு தமது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு […]
ஊசலாட்டத்தில் உலக சந்தை எண்ணெய் விலைகள்!

டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது விடுத்துள்ள மிகக் கடுமையான மற்றும் ஆவேசமான மிரட்டல்களைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக அச்சுறுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா […]
கனடாவின் கனாட்டாவில் வாகன விபத்தில்: 14 வயது சிறுவன் படுகாயம்

னடாவின் கனாட்டா (Kanata) பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக ஓட்டாவா முதலுதவிப் பிரிவினர் (Paramedics) தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு, மார்ச் வீதி (March Road) மற்றும் மெக்ஸ்வெல் பிரிட்ஜ் (Maxwell Bridge) சந்திப்புப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்தச் சிறுவன் மின்கலத்தினால் இயங்கும் ஸ்கூட்டரில் (Battery-operated scooter) சென்று கொண்டிருந்தபோது, அங்கு திரும்ப முயன்ற வாகனம் ஒன்று அவன் மீது மோதியுள்ளது. […]
ஈரானிய உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி படுகொலை!

ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி (Majid Khademi) இன்று காலை கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் உத்தியோகபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் (IDF) கேட்டபோது, அவர்கள் இந்த அறிக்கை குறித்து “ஆராய்ந்து” வருவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி, ஈரான்-இஸ்ரேல் போரின் போது கொல்லப்பட்ட முகமது காசேமிக்கு […]
வாவியில் மிதக்கும் சடலம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத ஒருவரின் சடலமொன்று இனம்காணப்பட்டுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக இன்று (06) காலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் […]
நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்!

ஹட்டன் டிப்போவை நவீன முறையில் புணரமைப்பதற்காக 6 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேற்கொள்வதற்கான பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, […]
விமான நிலையத்தில் 11 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இன்று (06) காலை 06:50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற […]