தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் தமது விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே, மின்சாரம் தாக்கி இவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக மின்சார வேலிகளை அமைத்த 56 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.