உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிவான் என். நிலவன், சந்தேகநபர்களை வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மீது முறையான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த வழக்குத் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.

திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz ஐ வசிப்பிடமாகவும், சின்னாளங்கண்டு அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரவிச்சந்திரன் சுபர்ணா அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான விபுலானந்தன் பஞ்சரத்தினம்(செட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகளும், ரவிச்சந்திரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும், யாதங்கி(சுவிஸ்), நர்மிகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மதுர்சன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும், சோபனா, சதீஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், விஜயரத்தினம்(சுவிஸ்), மனோரஞ்சிதம், ரஞ்சிதமலர்(பிரித்தானியா), புஸ்பராணி(சுவிஸ்), பிரபாகரன், […]

வடமராட்சியில் மணல் கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தைப் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மறிக்க முயன்றபோது, கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர். பொலிஸார் துரத்திச் சென்றபோது, கடத்தல்காரர்கள் வீதியில் மணலைக் கொட்டிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்யக் காணொளி (CCTV) ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் பகுதியில் யானைகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாழ்வாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை சுண்டிக்குளம் பகுதிக்குள் புகுந்த யானைகள், அங்குள்ள நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியுள்ளன. : கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி போன்ற கிராமங்களிலும் யானைகளின் ஊடுருவல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் குற்றச்சாட்டு: தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து மக்களை அகற்றுவதற்காகவே, திட்டமிட்ட முறையில் யானைகள் இப்பகுதிக்குள் கொண்டு வரப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யானைகளால் […]

பாதாள குழு உறுப்பினர்களிடம் 109 துப்பாக்கி ரவைகள் பறிமுதல்

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில்: சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 109 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்குளி – ஹெலுன்புர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி நடத்தப்பட்ட கொலைச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட நீண்டகால முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் […]

நாட்டில் நிலவும் நெருக்கடி; மலையகத்தில் மந்த போசன நிலை அதிகரிக்கும் – சச்சிதாநந்தன் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக மலையகத்திலுள்ளவர்கள் மந்த போசன நிலையினையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப தலைவர் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக ஊடகத்திற்கு நேற்று(03.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையகம் என்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாகும். அதிலும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தான் அதிகமான மந்த போசன நிலை […]

பிரான்ஸ் நாட்டு கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை எனவும், அனுமதியின்றி செல்லும் […]

மாலையில் வீதி மின்விளக்குகளை அணைக்க எதிர்ப்பு?

வீதி மின்விளக்குகளை மாலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை அணைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், ஏப்ரல் 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிலையை மோசமாகப் பாதிக்கும் என இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கம் (CMA) கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமர திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு அந்தச் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாலை நேரங்களில் […]

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனடியத் தமிழர் தேசிய அவை

தமிழ் கனடிய சமூகம் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூருவதற்கான சக்திவாய்ந்த அடையாளமாகவும் முக்கிய இடமாகவும் திகழும் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். என கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. அறிக்கையொன்றில் கனடியத் தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த மார்ச் 20, 2026 அன்று பிராம்ப்டனில் (Brampton) உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்குச் சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பீல் பிராந்திய பொலிஸாரின் (Peel Regional […]

சாதனை படைத்த யாழ். இந்துக் கல்லூரி மாணவன் காலமானார்!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த, யாழ். இந்துக் கல்லூரியின் திறமையான மாணவர் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். லவன் அக்சயன் என்ற அந்த மாணவன், கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் (A/L) கணிதப் பிரிவில் தோற்றி 3A பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார். அண்மையில் வெளியான பெறுபேறுகளின்படி, அவர் யாழ். மாவட்ட மட்டத்தில் 24-வது இடத்தைப் பிடித்துப் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றிருந்தார். பல்கலைக்கழகக் கனவுகளுடன் இருந்த இம்மாணவன், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் […]