யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தைப் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மறிக்க முயன்றபோது, கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.
பொலிஸார் துரத்திச் சென்றபோது, கடத்தல்காரர்கள் வீதியில் மணலைக் கொட்டிவிட்டு வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்யக் காணொளி (CCTV) ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.