கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது; வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற வேளையிலேயே இவ்விரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் […]

போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்பு

த்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்புடைய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தேவையையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், […]

‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ நூல் வெளியீட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி – முஜிபுர் ரஹ்மான்

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டதை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (04) உறுதிப்படுத்தினார். முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளவில்லை என்றும், அங்கு அவர் இருப்பது போன்று வெளியான காட்சிகள் ‘AI’ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் […]

வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள்; சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் அல்லது 96 சதவீதமானோர் நியமனங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு அவர்கள் எவ்வாறு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் அவர்களின் திறமைப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடனும் […]

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் நீரில் மூழ்கிப் பலி

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சிறுவன் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் […]

இரு பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பதற்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் ‘அவதானத்துடன் இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (04) மாலை 5.00 மணி முதல் நாளை மாலை 5.00 மணி வரை நடைமுறையில் […]

நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகே பாரிய தீப்பரவல்

தேசிய மின் உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்குக் கீழே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், இன்று (04) மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டுக்குக் கீழே அமைந்துள்ள சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள பகுதிக்கு, இனந்தெரியாத நபர்கள் எவரேனும் தீ வைத்திருக்கலாம் என நீர்த்தேக்க மீனவர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர். தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தின் உட்பகுதிகளுக்கு இலகுவாகச் செல்ல முடிகிறது. இவ்வாறான நிலையில், […]

அரச வைத்திய அதிகாரிகள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும்.

எறிகணை மீட்பு

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் சிறிய வகை எறிகணை ஒன்று,இன்று பகல் (04) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

48 மணிநேரயுத்தநிறுத்தம்; நிராகரித்தது ஈரான்!

அமெரிக்கா முன்வைத்த 48 மணிநேர போர் நிறுத்த (Ceasefire) முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தப் போர் நிறுத்த முன்மொழிவு கடந்த புதன்கிழமை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாட்டின் ஊடாக இந்தத் தூது ஈரானுக்கு அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானியத் தரப்பு இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துவிட்டதாகப் பெயரிடப்படாத அந்தத் தகவல்தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான […]