அமெரிக்க போர் விமானம் வீழ்த்தப்பட்டதை கேலி செய்த ஈரானிய சபாநாயகர்

ஈரான் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்காவைக் கேலி செய்துள்ளார். “ஈரானை தொடர்ந்து 37 முறை தோற்கடித்த பிறகு, அவர்கள் தொடங்கிய இந்த ‘வியூகமற்ற’ போர் இப்போது ‘ஆட்சி மாற்றம்’ (Regime change) என்ற நிலையிலிருந்து, ‘ஏய்! யாராவது எங்கள் விமானிகளைக் கண்டுபிடிக்க முடியுமா? தயவுசெய்து?’ என்ற நிலைக்குத் தரம் […]

கனடா எட்மண்டனில் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வீட்டுக்கு சீல் வைப்பு

வடக்கு எட்மண்டனில் (Edmonton) உள்ள ஒரு வீட்டில் கடந்த ஓராண்டாக போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அந்த வீட்டை மூடியுள்ளனர். அந்த வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நபர்களின் வருகை, குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் அண்டை வீடுகளின் புல்வெளிகளில் மக்கள் உறங்குவது போன்ற அசாதாரணமான செயல்கள் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆல்பர்ட்டா ஷெரிஃப்களின் ‘பாதுகாப்பான சமூகங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள்’ (SCAN) பிரிவு விசாரணையைத் தொடங்கியது. எட்மண்டன் […]

ஹெரோயின் கடத்திய பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஒரு கணக்கில் 7,37,62,939.95 ரூபாயும், மற்றொரு கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் […]

லெபனானின் ஐ.நா. முகாம் மீது தாக்குதல்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை முகாம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள எடைசா பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது நேற்று (03) மதியம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இந்த வெடிப்பில் மூன்று அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

இலங்கையில் சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் நாட்டின் ‘சைபர் குற்றச்சட்டம்’ (Cybercrimes Act) கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எப்.யு. வூட்லர்  தெரிவிக்கையில், இலங்கையில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வார் எனக் கூறினார். […]

கிளிநொச்சி தர்மபுரம் பகுதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என என அடையாளம் […]

கனடாவின் பொருளாதாரத்தில் ஹோர்முஸ்  நீரிணைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் – ‘கனடா பல்ஸ் இன்சைட்ஸ்’ ஆய்வு

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்துவது, உலகப் பொருளாதாரம் மற்றும் கனடியர்களின் தனிப்பட்ட நிதிநிலை (Pocketbooks) ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பெரும்பாலான கனடியர்கள் “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளதாக ஒரு புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சிட்டிநியூஸிற்காக (CityNews) ‘கனடா பல்ஸ் இன்சைட்ஸ்’ (Canada Pulse Insights) நடத்திய ஆய்வில், உலகப் பொருளாதாரம் மற்றும் கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து 88 சதவீதம் பேர் கவலை கொண்டுள்ளனர்; இதில் 52 சதவீதம் […]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றும் பணிப்புறக்கணிப்பு

நியாயமற்ற இடமாற்ற முறையைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(04) காலை 8 மணி முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அரச வைத்தியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் முறையற்ற இடமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமா? அல்லது அடையாளப் போராட்டமாக அமையுமா? என்பது குறித்து இன்று(04.04.2026) கூடவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடு […]

கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிப் பலி!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவேலி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராதுவேலி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்?

நிலக்கரி நெருக்கடியால் எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிடும். எரிபொருள் விலையேற்றம், வறட்சியான காலநிலை, நிலக்கரி தட்டுப்பாடு ஆகிய காரணிகளால் மின்கட்டணம் தற்போது மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எரிபொருள் தட்டுப்பாடு, வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு ஆகிய காரணிகளால் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்படவில்லை. மின்கட்டண திருத்தம் […]