சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் ஒரு விமானி மீட்பு!

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E போர் விமானத்தின் ஒரு வீரர், அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார் என்பதை இரண்டு அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று சிபிஎஸ் (CBS) நியூஸ் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுவாக F-15E போர் விமானத்தில் இரண்டு விமானிகள்ள் (இருக்கை வசதி) இருப்பார்கள். எனவே, மற்றொரு வீரரைத் தேடும் மற்றும் மீட்கும் பணி (Search and Rescue) தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
யாழ் பண்ணையில் கைக்குண்டுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடையவர் என்றும், பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது பிடிபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆர்ட்டெமிஸ் II; விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு நேற்று(03) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. நாசா தனது ‘X’ சமூக ஊடகக் கணக்கில் “அது நாம்தான்!” (That’s us!) என்ற தலைப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. 1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணிக்கும் ஒராயன் (Orion) விண்வெளி ஓடம், தனது பயணத்தின் முதல் நாளில் உயிர் காக்கும் கவசங்கள் மற்றும் காற்று மண்டலக் […]
நீரின்றி தவிக்கும் குடும்பங்கள்

வறட்சியான வானிலையுடன் கொட்டாவை – ருக்மல்கம வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில நாட்களாக நீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சூழலில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட சில நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு அந்தந்த வீடுகளுக்கு நீர் வழங்கப்பட்ட போதிலும், சில தாங்கிகளுக்கு இதுவரை நீர் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த கேள்வி காரணமாக சில தாங்கிகளில் நிரப்பப்படும் நீர், அரை […]
பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் […]
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விடயத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை – சானக்க பண்டார

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர வீட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இவரின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணையில் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக்க பண்டார தெரிவித்தார். மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பு வெள்ளிக்கிழமை (3) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் […]
நுரைச்சோலைக்கு தரம் குறைந்த நிலக்கரி; மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதோடு பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளது – நளின் பண்டார

நுரைச்சோலைக்கு தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். வியாழக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இறுதியாக நாட்டை வந்தடைந்த 13ஆவது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தொகையே தற்போது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு வழமையை விடக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. தரம் […]
கனடா; மேரிடைம்ஸ் பகுதிகளில் ‘உறைபனி மழை’ எச்சரிக்கை

நீண்ட வாரயிறுதியின் தொடக்கத்தில், மேரிடைம்ஸின் பெரும்பகுதிகளில் உறைபனி மழை காரணமாகப் பயணம் செய்வது கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு பனிப்பொழிவும் நிலவக்கூடும். நோவா ஸ்கோடியா (Nova Scotia), நியூ பிரன்சுவிக் (New Brunswick) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு (Prince Edward Island) ஆகிய பகுதிகளில் உறைபனி மழை மற்றும் பனிப்பொழிவு குறித்த எச்சரிக்கைகளை என்விரான்மென்ட் கனடா (Environment Canada) விடுத்துள்ளது. சாலைகளில் பனி உறைந்து வழுக்கும் தன்மை கொண்டிருப்பதாலும், […]
தென்னை சார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் பாரிய பின்னடைவு

மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில், இதன் காரணமாக தென்னை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் 1,200 மில்லியன் முதல் 1,800 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருமானம் இந்த ஆண்டில் கணிசமாகக் குறையக்கூடும். […]
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன நிலையில் உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை – சஜித் பிரேமதாச
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் மக்களுக்கு ஒரு விசேட நிவாரணப் பொதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை (03) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் […]