இலங்கை ரஷ்ய எண்ணெய் கப்பலை பெறுவது சாத்தியமில்லை?

ஒரு மாத அமெரிக்க தடைகள் விலக்கு ஏப்ரல் 11 அன்று காலாவதியாக இருக்கும் நிலையில், விநியோகம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் இலங்கை விரைவில் ரஷ்ய எண்ணெய் கப்பலை பெறுவது சாத்தியமில்லை என்று தெரியவந்துள்ளது. தடைகள் நீக்கப்பட்ட பிறகு, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் 20 சதவீதத்திற்கு பொறுப்பான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் தாக்கத்தை தடுக்க, இலங்கை அரசாங்கம் பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்ய ரஷ்ய அதிகாரிகளுடன் […]
சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் இற்றைவரை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை?

சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். நூல்களை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்து மீண்டும் வினவியபோது, எழுத்தாளரை இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜி.ஜி. சரத் ஆனந்தவினால் ‘ஸ்மாரக சிலாவத’ என்ற […]
25,000 தொன் உரம் நாளை வருகின்றது!

25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், யல பருவம் ஆரம்பமாகும் இவ்வேளையில் விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் (TSP) மற்றும் பண்டி […]
சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது!
சட்டவிரோதமாக உதிரிப்பாகங்கள் இணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு பொலிஸார் மற்றும் முப்படைச் சார்ந்த சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடவத்தை, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய […]
மருத்துவ பீட மாணவர் ஒருவர் வைத்தியராக வெளியேறுவதற்கு அரசாங்கம் அதிக தொகையைச் செலவிடுகிறது – அமைச்சர் உபாலி பன்னிலகே!

கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் உபாலி பன்னிலகே இந்தத் தகவல்களை வெளியிட்டார். இலங்கையின் சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் இலவச சுகாதார சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஒருவரின் பணப்பையிலுள்ள பணத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீட மாணவர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின் வைத்தியராக வெளியேறுவதற்கு அரசாங்கம் […]
நோயாளர் காவு வண்டி சேவைக்குப் புதிய அலுவலகம்

1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கான புதிய அலுவலகம், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (04) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கொழும்பு 07, ஹோர்டன் பிளேஸில் (Horton Place) அமைந்துள்ள இடத்தில் இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு: பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்றது – சுகாதார அமைச்சர்

மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பானது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையற்ற ஒன்று என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின், நோயாளிகளின் உயிரைப் பிணைக் கைதிகளாக்காமல், நீதிமன்றத்தின் ஊடாகப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று […]
வவுனியாவில் சடலத்தை அகழ்ந்து தலை துண்டிப்பு!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் சடலத்தை இனம் தெரியாத கும்பல் ஒன்று தோண்டி எடுத்து, அதன் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் கருப்பணிச்சான்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மயானத்தில் அண்மையில் வேறொரு இறுதிச்சடங்கு நடந்தபோது, அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தை அடுத்து மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, […]
இந்த வருடத்துடன் சுதந்திரமாக வாழ்ந்த காலம் முடிவிற்கு வருகிறது? – முகிந்தன் துரைராஜசிங்கம்

உலக அரசியல் களத்தில் இன்று நிகழ்ந்து வரும் மாற்றங்கள் ஏதோ தற்செயலானவை அல்ல, அவை மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு உலகளாவிய மாற்றத்தின் தொடக்கப் புள்ளிகள். தற்போதைய உலகளாவிய சூழலில், எரிசக்தி தட்டுப்பாடு என்பது ஒரு வெறும் ஊகமாக இல்லாமல், ஒரு கசப்பான உண்மையாக உருவெடுத்துள்ளது. இன்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரே நாளில் தங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைகள், உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய “Energy Lockdown” வரப்போவதை […]
யாழ். நகர அபிவிருத்திக்கு உலக வங்கி அனுமதி

யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் இரயில் நிலையப் பகுதி மற்றும் யாழ். கோட்டை ஆகிய இடங்களை ஒருங்கிணைத்து அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் குறித்த இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.