கொழும்பு, மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில்:
சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 109 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி – ஹெலுன்புர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி நடத்தப்பட்ட கொலைச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட நீண்டகால முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.