அரச பேருந்தில் இருந்து விழுந்த நடத்துநர் படுகாயம்

அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் , பேருந்திலிருந்து விழுந்ததில் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா நகரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு நோக்கிப் பயணித்த, அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது, அதன் மிதிப்பலகையில் நின்றவாறு கடமையில் ஈடுபட்டிருந்த நடத்துநர், சாரதி திடீரென தடை (Brake) போட்டதன் காரணமாக நிலைகுலைந்து பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு […]

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் அவர்களின் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணைத் திகதி: குறித்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த தயாளனி திலீபன் அவர்கள் சில காலத்திற்கு முன்னர் மர்மமான முறையில் […]

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு நீதிமன்றம் கட்டளை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. குற்றச்சாட்டு: தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்தியரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை. நீதிமன்ற நடவடிக்கை: இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த யாழ். நீதவான் நீதிமன்றம், குறித்த அவதூறுச் செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குமாறும், மேலும் […]

யாழில் கூடுதல் கட்டணம் அறவிட்ட பேருந்து நடத்துனருக்கு தண்டம்

ழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பேருந்தில் பயணித்த பயணியொருவரிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட […]

தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி

தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சர்வதேச லயன்ஸ் கிளப் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தந்தப் பகுதி இளைஞர்களை இத்திட்டத்தில் இணைக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாத்தறை ராகுல சந்திக்கு […]

நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தொடர்பு – நாமல் ராஜபக்‌ஷ

நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வியாழக்கிழமை (02) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தின் கொள்கையானது, மற்றவர் பையைத் திருடிவிட்டு ‘திருடன் திருடன்’ என கத்திக்கொண்டு ஓடும் ஒரு பிக்பொக்கெட் திருடனின் செயலைப் […]

சித்திரைப் புத்தாண்டையொட்டிய தினங்களில் வீட்டிலிருந்து வேலை?

அரச நிறுவனங்களில் பணிகளை எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் ஒன்லைன் (Online) ஊடாக முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, அரச சேவையை முறைப்படி முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழி (Online) ஊடாக நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தி அரச சேவையைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் […]

“வளமான நாடு அழகான வாழ்க்கை” இரத்தினபுரியில் புதிய வீடுகள் கையளிப்பு

“வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய “அனைவருக்கும் இல்லம்” தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய இறக்குவானை கொட்டலை, பலவின்ன, பிபிலேகம பிரதேசங்களில் குறைந்த வருமனம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுளை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பங்கேற்புடன் நேற்றைய தினம் (01) பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்வின் கொடக்கவெல பிரதேச சபை தலைவர் குலரத்ன தந்தெனிய மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் […]

பாடசாலை மாணவன் விபத்தில் உயிரிழப்பு

கண்டி – திகன வீதியில், பல்லேகலை இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் காயமடைந்துள்ளார். கண்டியில் உள்ள முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், இன்று வியாழக்கிழமை (02) காலை பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர் தரம் 12-இல் கல்வி […]

இராணுவ முகாமிற்காக மேற்கொள்ளப்பட்ட காணி அளவீடு தற்காலிகமாக நிறுத்தம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. குறித்த காணி அளவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று (02) காலை 8 மணியளவில் இராணுவ முகாம் முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட […]