இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான மீனவர்களுக்கு தடுப்புக் காவல்

பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மீனவர்கள் இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இந்த மீனவர்கள் அவர்களின் பலநாள் மீன்பிடி படகுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் […]

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சம்; ஷமீந்திர மற்றும் பிரியங்காவை கைது செய்ய திறந்த பிடியாணை

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம், இன்று தனது தீர்மானத்தை அறிவித்து இந்த பிடியாணைகளை […]

20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது?

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார். வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு […]

இலங்கை தேசிய கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, தமக்கு “தடை இல்லா சான்றிதழ்” கடிதத்தை வழங்குமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிரேஸ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாடு இன்று […]

குற்றத் தடுப்புப் பிரிவுடைய சுற்றிவளைப்பில் 14 பேர் கைது 

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட 1, 2 மற்றும் 3 ஆம் கட்டப் பகுதிகளை உள்ளடக்கியதாக, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் உதவியுடன் நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட சுமார் 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2830 மில்லிகிராம் ஹெரோயின், 3890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 6000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் […]

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் நிலைப்பாடு

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் எமது அதிகாரிகளுடன் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்றார். பரந்த அளவிலான மோதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாகேய், போர் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் என்ற சுழற்சியை […]

இலங்கை ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு சந்திப்பு!

இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களைச் சர்வதேச நாணய நிதியம் (IMF) வரவேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது, வருமான முகாமைத்துவம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து IMF பிரதிநிதிகள் திருப்தி வெளியிட்டுள்ளனர். இருப்பினும், சர்வதேச ரீதியில் நிலவும் பதற்றமான சூழல், குறிப்பாக மத்திய கிழக்கு மோதல்கள் இலங்கையின் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் அதேவேளை, […]

விளக்கமறியலில் பிள்ளையான்!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன்

யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், திரு. திருமதி SRS செல்லத்துரை தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற சண்முகரட்ணம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், விக்னேஷ்வரன்(விக்கி) அவர்களின் அன்பு மனைவியும், சேயோன், சஜீத், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, பாலச்சந்திரன், பாலேஸ்வரன், […]