கனேடிய தமிழ்சமூகத்தின் மீதான சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அச்சுறுத்தல் – உலகத் தமிழர் உரிமைக்குரல் அமைப்பு

கனடா அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை விதிக்காமல் இலங்கைக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த அணுகுமுறை, தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதுடன், ஈழத் தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் உரிமைகளை ஒடுக்குவதற்கான நாடுகடந்த முயற்சிகளைத் தூண்டும் சூழல்களையும் உருவாக்குகிறது என குறிப்பிடும் “உலகத் தமிழர் உரிமைக்குரல்” அமைப்பு; இந்த அவசரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அளவிலான அரசு அதிகாரக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் உறுதியான மற்றும் […]
மீண்டும் விளக்கமறியலில் கபில சந்திரசேன

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபரான கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் […]
குடிநீர் முகாமைத்துவம்- தட்டுப்பாட்டைக் கண்காணிக்க விசேட குழு

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்காணிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் விசேட செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியான வானிலையால் நீர் ஆதாரங்கள் வேகமாக வற்றி வருவதையும், அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் உற்பத்தித் திறனை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்திற் கொண்டு, நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளைக் கொண்ட இந்த விசேட செயற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் விபத்து – ஐவர் படுகாயம்

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார். நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு […]
அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் மற்றும் இத்தாலி எதிர்ப்பு

ஐக்கிய அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை பிரான்ஸும் இத்தாலியும் எதிர்ப்பதாக தகவல் மூலங்கள் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸானது இஸ்ரேலுக்கான இராணுவ விநியோகங்களுடன் செல்லும் விமானத்தை தனது வான்பரப்பின் மூலம் செல்வதை தடுப்பதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். சிசிலியிலுள்ள விமானத் தளத்தில் அமெரிக்க இராணுவம் தரையிறங்குவதற்கான அனுமதியை இத்தாலி கடந்த வாரம் மறுத்ததாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
கூலித் தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
ட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (31.03.2026) நள்ளிரவு இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஐயாத்துரை கந்தசாமி, நான்கு பிள்ளைகளின் தந்தையாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நெல் வயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் உயரமான கட்டடத்தில் தங்கியிருந்தவர், முன்பு ஒருமுறை தவறிவிழுந்ததும், தரையில் […]
பச்சிலைப்பள்ளி – முகாவிலில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட்டம்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது. இராணுவத்தினர் வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைப்போம் என தெரிவித்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று தமிழ்; மக்களின் உறுதி காணிகளை இராணுவத்தினருக்கு நிரந்தர முகாமை அமைப்பதற்காக கையகப்படுத்த முயல்கின்றது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் […]
ஈரானில் அமெரிக்கா முன்னெடுத்த மூலோபாயரீதியிலான நடவடிக்கைகள் வெற்றியடையவுள்ளது – டிரம்ப்

ரானில் அமெரிக்கா முன்னெடுத்த மூலோபாயரீதியிலான நடவடிக்கைகள் வெற்றியடையும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளா. ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தும் திறனை அமெரிக்கா முறையாக முடக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய இராணுவ நடவடிக்கைகள்: இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ட்ரம்ப், “அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானின் திறன் மற்றும் அதன் எல்லைகளுக்கு வெளியே தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சி ஆகியவற்றை அமெரிக்கா திட்டமிட்டுச் சிதைத்து வருகிறது. ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தித் […]
அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின் மனிதர்களுடன் நிலவுக்கு பாயும் ’ஆர்டெமிஸ் ’

சுமார் அரை நூற்றாண்டு கால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. நிலவைச் சுற்றி வரப்போகும் உலகின் முதல் மனிதப் பயணத்திற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) நேற்று விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 1960 மற்றும் 70-களில் நிலவில் தடம் பதித்த ‘அப்பல்லோ’ திட்டங்களுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் பிரம்மாண்ட கனவின் முதற்கட்டமே இந்தத் திட்டமாகும். எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வசிக்கவும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்லவும் இது ஒரு வலுவான […]
சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை!

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானம், அவர்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெளிவுபடுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிக்கையொன்றில், பிரதி அமைச்சர் இது குறித்து பின்வருமாறு விளக்கியுள்ளார்: பொதுவாக, எரிபொருள் கொடுப்பனவுகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் திகதி நிலவும் சந்தை விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. எனினும், அண்மைய அமைச்சரவை அங்கீகாரத்தின்படி, ஏப்ரல் […]