குரோஷியாவைத் தோற்கடித்த பிரேஸில்

ஐக்கிய அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற குரோஷியாவுடனான சிநேகபூர்வ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது. பிரேஸில் சார்பாக டனிலோ, இகொர் தியாகோ, கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொவ்ரோ மஜெர் பெற்றிருந்தார். இதேவேளை பெல்ஜியம், மெக்ஸிக்கோவுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் தம்நாட்டில் நடைபெற்ற ஜப்பானுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இது தவிர […]
நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வட மாகாணம் பொருத்தமானதாக இருந்தும் அதை முழுமையாக நாம் பயன்படுத்தவில்லை!

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நீர்வாழ் உயிரின செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் […]
லெபனானில் போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை சுமார் 1318 பேர்வரை பலி!

லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. அத்துடன் இந்த போரில் 3,935 பேர் காயமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நட்பு நாடான […]
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் இன்று வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 06:48 மணியளவில் (22:48 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவில் இருந்ததாகக் கணிக்கப்பட்ட நிலையில், பின்னர் 7.4 ஆக உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் […]
இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு

இன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் […]
ஈரான் போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் கூறிய தகவல் ‘ஆதாரமற்றது’: ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

தெஹ்ரான்: ஈரான் போர்நிறுத்தம் கோரியதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது “தவறானது மற்றும் ஆதாரமற்றது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baqaei) தெரிவித்த இந்தக் கருத்துக்களை அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் புதிய அதிபர்—அவரது பெயரைக் குறிப்பிடாமல்—தன்னிடம் போர்நிறுத்தம் குறித்துக் […]
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைது!

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 5 இளைஞர்களிடம் இருந்து1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ட்ரம்பின் 15 அம்சத் திட்டம்; பேச்சுவார்த்தைக்கான தொடக்கமாக ஈரான் கருதவில்லை?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிந்துள்ள ’15 அம்சத் திட்டத்தை’ (15-point plan), ஒரு முறையான தூதரகத் தீர்வாகவோ அல்லது பேச்சுவார்த்தைக்கான தொடக்கமாகவோ ஈரான் கருதவில்லை என அரசியல் ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா (Alex Vatanka) தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளி விவகாரத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவின் நேர்காணலைத் தொடர்ந்து இது குறித்துப் பேசிய அவர், ஈரானைப் பொறுத்தவரை இது ஒரு தீர்வை நோக்கிய நகர்வு என்பதை விட, அமெரிக்காவின் நிபந்தனைகளைத் திணிக்கும் […]
முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஐபிஎல் 2026 தொடரின் 5ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று(1) மோதின. நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 2026 ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் | Lsg Vs Dc Lsg Vs Dc அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த லக்னோ டெல்லி அணியின் பந்துவீச்சை […]
அவுஸ்திரேலியா சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான முதல் தடையை முறையாகப் பின்பற்றவில்லை என சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது அவுஸ்திரேலிய இணைய பாதுகாப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தத் தடை நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல சிறுவர்கள் இன்னும் கட்டுப்பாடுகளை மீறி கணக்குகளை வைத்திருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. “தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அரசாங்கம் திரட்டி வருகிறது. இதன் மூலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை வெல்ல […]