மாணவர் சேர்க்கை: புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தரம் 2 முதல் தரம் 11 வரையான மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2025 செப்டம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 27/2025 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையிலும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களைப் பேணும் வகையிலும் புதிய […]
திருமலை சண்முகா மகளிர் கல்லூரி மூன்று துறைகளில் சாதனை

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி உயிரியல், கணிதம் மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைக் கைப்பற்றிப் பாரிய சாதனை படைத்துள்ளது. உயிரியல் பிரிவில் இக்கல்லூரி மாணவி தர்ஷனா கோணேஸ் 3A சித்திகளைப் பெற்று, திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடத்தையும் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே 2023 சாதாரண […]
போதையில் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கம்பஹா மாவட்டம், வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓட்டோ ஒன்றில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இருவர், சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளிஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார். நேற்றுமுன்தினம்(30) நெடுங்கமுவ முதல் மீகஹவத்த வரையான பிரதான வீதியில் இந்த ஆபத்தான சாகசச் செயல் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதை […]