சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த கடற்தொழிலாளர்கள் கைது

கிளிநொச்சி – பூநகரி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த கடற்தொழிலாளர்கள் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்படிருந்த நிலையில் நேற்று (31.03.2026) பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதுடன் இதன்போது சந்தேகநபர்கள் 36 பேரும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடற்தொழிலாளர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் ஏழு […]

தங்கத்தின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (01.04.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,695.96 டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் (31.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக காணப்பட்டது. மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவு […]

வெளியாகியுள்ள பெறுபேறுகள்! அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள், 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 11 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், […]

வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் திருக்குமரனை சந்தித்த ஆளுநர்

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இம்மாணவனையும், உயிரியல் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற ஆ.கிரிஷாந்த் மற்றும் க.மதுமினி ஆகியோரையும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றமை மாகாணக் கல்வி வரலாற்றின் புதிய அத்தியாயம் எனப் பாராட்டிய ஆளுநர், இம்மாணவர்கள் […]

எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு பக்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கப்பலிலிருந்து கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது போன்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இதற்கு ஒரு நாளைக்கு முன்னர் துபாய் கடற்பரப்பிற்கு அருகில் […]

ஈரானின் ஆயுத கிடங்கு மீது ‘பங்கர்’ குண்டு வீச்சு

ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசி​யது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள ராணுவ முகாம்​களை குறி வைத்து அமெரிக்க, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டுமழை பொழிந்தன. மேலும் ஈரானின் இஸ்​ப​கான் […]

அமெரிக்க ஊடகவியலாளர் வளைகுடாவில் கடத்தப்பட்டார்!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட ஊடகவியலாளரை மீட்கும் நோக்கில் பக்தாத் நகர் முழுவதும் ஈராக் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் செய்திகளைத் தொடர்ந்து சேகரித்து வந்த ஷெல்லி கிட்டில்சன் (Shelly Kittleson) என்ற அமெரிக்கப் பெண் ஊடகவியலாளரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் பிரபல செய்தித் தளம் உள்ளிட்ட பல சர்வதேச […]

ஈரான் தாக்குதல்: சிறுமி உட்பட 14 பேர் காயம் – இஸ்ரேல்

இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 வயதுச் சிறுமி மற்றும் 13 வயதுச் சிறுவன் உட்பட மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் அவசர மருத்துவச் சேவை அமைப்பான மேகன் டேவிட் அடோம் (Magen David Adom) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: தாக்குதலின் போது சிதறிய உடைந்த பாகங்கள் (Shrapnel) தாக்கியதில் 11 வயதுச் சிறுமி காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மகா […]

ஈரான் போரை நிறுத்த சீனா மற்றும் பாகிஸ்தான் ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைப்பு

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, உடனடி போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டத்தை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து முன்வைத்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குச் சீன ஆதரவைக் கோரி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த முன்முயற்சி வரைவு செய்யப்பட்டது. “அமைதிக்காகப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக” சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் சீனாவின் எதிர்வினை இதுவரை மிகவும் […]

இலங்கையின் பொருளாதார நிலை; பிரித்தானிய நாடாளுமன்றக் குழு கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் பிரித்தானியா – இலங்கை இடையிலான உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கைக்கான பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG) அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முறைசாரா விளக்க அமர்வு ஒன்றை நடத்தியது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட முன்னணி பொது விவகார சிந்தனைக் குழுவான ‘ஓடிஐ குளோபல்’ (ODI Global) தயாரித்த, இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார மாற்றம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விவாதிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந்த அமர்வுக்கு அனைத்துக் […]