உலகளவில் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிப்பு: ஆபத்தில் நோயாளர்கள்!

ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல், மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேன்சர் மருந்துகள், இன்சுலின், உயிர்க் காக்கும் மருந்துகளின் விநியோகம் தாமதப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் பல மருந்து பொருட்களுக்கு […]
கனடா நிதியமைச்சர் சீனாவிற்கு விஜயம்

சீனாவுடனான ஆதரவு மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள கனடா நிதி அமைச்சர் சீனாவுக்கு ஒரு முக்கியமான வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட சந்திப்பின் தொடர்ச்சியாகவே தனது இந்தப் பயணம் அமைந்துள்ளதாக ஷாம்பெய்ன் தெரிவித்துள்ளார். கனடா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் புதிய வர்த்தகக் கூட்டாளிகளை உருவாக்கவும் முயற்சிக்கும் வேளையில் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் சீனாவுக்கு ஒரு முக்கியமான வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க […]
நேட்டோ அமைப்பில் இருந்து விலக அமெரிக்கா தீவிர பரிசீலனை – டிரம்ப் பேட்டி!

ஈரான் மீதான போரில் தங்களுக்கு ஆதரவளிக்காததால், நேட்டோ (NATO) தற்காப்பு கூட்டணியில் இருந்து அமெரிக்காவை முழுமையாக விலக்கிக் கொள்வது குறித்து தான் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘தி டெலிகிராப்’ (The Telegraph) நாளிதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்கள்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் தங்களுக்கு உதவ நேட்டோ நாடுகள் முன்வராதது வெள்ளை மாளிகைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. […]
மட்டக்களப்பு அசம்பாவிதங்களில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது; கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவம் தொடர்பில் 24 மணிநேரத்தில் சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தும் இன்று புதன்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடும் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. மட்டக்களப்பு, மண்முனை […]
ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது

சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” ஊடாக கடத்திச் செல்ல முயன்ற இரு வெளிநாட்டுப் பயணிகள் புதன்கிழமை (01) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய சீன பிரஜைகள் என்பதுடன், அவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதன்முறையாகும். இவர்கள் புதன்கிழமை (01) அதிகாலை 12:20 மணியளவில் தாய்லாந்தின் […]
பருத்தித்துறையில் சாரணர் மாவட்ட கிளைச் சங்க அலுவலம் திறப்பு

இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆணையாளர் புவனேந்திரராசா தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையிலுள்ள கருணை இல்லத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் தலைவரும், சாரணிய சங்கத்தின் பதவி வழி தலைவருமான நடராசா திருலிங்கநாதான் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சாரணிய கொடியை சாரணிய சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து […]
பேச்சு திறனை இழந்த விண்வெளி வீரர்; நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

விண்வெளி என்பது புதிர் போன்றது. இதற்கான விடைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து வருகிறோம். இந்த முயற்சியில், விண்வெளி வீரர்கள் ஏராளமான ஆபத்துகளை சந்தித்திருக்கின்றன. அப்படித்தான் அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் ஃபிங்கே, மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார். அதாவது அவர், தனது பேச்சு திறனை இழந்திருக்கிறார். இது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதியதாக விண்வெளிக்கு செல்லும் இஸ்ரோ வீரர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது? ஒரு வாரத்திற்கு முன்னர், அசோசியேட்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு மைக்கேல் ஃபிங்கே […]
நாளை டிரம்ப் விசேட உரை

ஈரானுடனான போர் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை(01) இரவு ( 9 PM Eastern Time) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் X தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி வியாழன் காலை 6.30 மணிக்கு மேற்படி உரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லைப்பிட்டி சிறுவன் கொலை – குடும்பத்தினருக்குத் தொடரும் அச்சுறுத்தல்; சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான செய்திகளைப் பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி, அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்ததாகக் கூறி நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், […]
சமஸ்டி கொள்கையினை தமிழரசுக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை- கைவிடமாட்டோம் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்

தமிழரசுக்கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல, ஜனநாயக ரீதியான பண்புமிக்க கட்சி, இந்த கட்சியில் எந்த காலகட்டத்திலும் தந்தை செல்வாவினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான கட்சியாகவே அது காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வைத்து கருத்து […]