சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” ஊடாக கடத்திச் செல்ல முயன்ற இரு வெளிநாட்டுப் பயணிகள் புதன்கிழமை (01) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய சீன பிரஜைகள் என்பதுடன், அவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
இவர்கள் புதன்கிழமை (01) அதிகாலை 12:20 மணியளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து, தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 5 பயண பொதிகளுக்குள் இருந்து, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட “சுன்ஹுவா” (Chunghua), “குயியான்” (Guiyan) மற்றும் “செப்வோல்வ்ஸ்” (Septwolves) ஆகிய வர்த்தக நாமங்களை கொண்ட 118,000 சிகரெட்டுகள் அடங்கிய 590 கார்ட்டூன் அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன . இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.