ஊர்காவற்துறையில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு […]
இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி மூலங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அந்நாட்டின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரமன் மர்ஷாவின் இதனை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ச்சியாக வழங்கவும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். மத்திய […]
வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீட்டில் மோதி விபத்து

நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (1) மாலை விபத்துக்குள்ளான குறித்த லொறி நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் லொறி என தெரியவந்துள்ளது. இதன்போது லொறியின் சாரதியும், அதன் நடத்துனர் இருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக […]
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கு குளவி கொட்டு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகளே இந்த அனர்த்தத்திற்கு இன்று (1) முகங்கொடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய காட்டு வழி ஒன்றின் ஊடாக சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து 1990 அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். […]
ஈரான் தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புகிறார் – ட்ரம்ப்
ஈரானிய தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே ஆற்றவுள்ள உரைக்கு முன்னதாக குறித்த விடயத்தை பகிர்ந்துள்ளார். ஈரானின் புதிய ஆட்சிமுறை ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நபர் தனக்கு முன்னிருந்தவர்களை விட மிகக் குறைந்த தீவிரப்போக்குடையவர் மற்றும் அதிக புத்திசாலி என்று வர்ணித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை […]
நாளுக்கு நாள் நாட்டு மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது

நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசிடமே காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறித்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளார். நாளுக்கு நாள் நாட்டு மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது. எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன. இதனால் 2 கோடியே 20 இலட்சம் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி வருகின்றனர். சமூகத்தில் ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கென […]
எரிபொருள் கையிருப்பு விபரம்!

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளை இறக்குவதற்கு இலங்கையிலுள்ள இரண்டு இடங்களும் தற்போது பணிச்சுமை அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கப்பல்களைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் விளக்கிய கலாநிதி மயூர நெத்திகுமார: “ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் எரிபொருளை இறக்குவதற்கு […]
எமது தேசத்தின் எதிரிகளுக்காக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படமாட்டாது – ஈரான்

ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோது திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் அதற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் வௌியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, நிலைமை உறுதியாகவும் ஆதிக்கத்துடனும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கேலிக்குரிய செயல்களால் இந்தத் தேசத்தின் எதிரிகளுக்கு […]
தவெக தலைவர் விஜய்க்குப் போதுமான பாதுகாப்பு இல்லை?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வரும் (தற்போது பதவியில் இல்லாத அல்லது ஓய்வு பெற்ற ஒரு முக்கிய அதிகாரி என தெரிகிறது) ஒருவருக்கு தவெக சார்பில் அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழக பொலிஸார் விஜய்யின் பிரசாரக் கூட்டங்களுக்குப் போதிய பாதுகாப்பை […]
ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (Hartley College) மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளனர். துறை வாரியான சாதனைகள்: • கணிதப் பிரிவு: மாணவன் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ‘A’ சித்திகளைப் பெற்று, யாழ். மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 12-வது இடத்தையும் பிடித்துக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். • உயிரியல் பிரிவு: மாணவன் சந்திரபாலா கதுசன் […]