நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மக்கள் நம்பக் கூடாது – சீமான்

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், மற்ற கட்சிகளின் இலவசத் திட்டங்களையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் விமர்சிக்கும் வகையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார். “வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டிற்கு ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என்று சீமான் கூறியுள்ளார். இவ்வாறான வாக்குறுதிகள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இதையே அவர் “காதில் தேன் ஊற்றுவது” என்று குறிப்பிடுகிறார். அதாவது, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மக்கள் […]

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!

அரசாங்கத்தின் நிலக்கரி ஊழல் காரணமாகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். புதன்கிழமை (01) அன்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது: “எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலம் பொதுமக்களுக்கு அத்தனை சுபமானதாக அமையப் போவதில்லை. இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை […]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் போராட்டம்

இடமாற்றப் பிரச்சினையை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வியாழக்கிழமை (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்த வேலைநிறுத்தக் காலப்பகுதியில் அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் வழமை போல் தடையின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னணி எண்ணெய் நிறுவன எரிபொருள் கிடங்கு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் (Erbil) நகரில் அமைந்துள்ள பிரித்தானியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான பிபி (BP) மற்றும் அதன் துணை நிறுவனமான காஸ்ட்ரோல் (Castrol) ஆகியவற்றின் எரிபொருள் கிடங்கு மீது இன்று புதன்கிழழை (1) அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகக் கருதப்படும் இந்தத் தற்கொலைப் படை ட்ரோன்கள், எரிபொருள் டாங்கிகள் மீது மோதி வெடித்ததில் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் […]

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) உயர்மட்டத் தூதுக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த சந்திப்புக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில், அதன் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் (பா.உ), வே. இராதாகிருஷ்ணன் (பா.உ) மற்றும் […]

உலகக் கிண்ணத் தகுதியை இழந்த இத்தாலி!

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இத்தாலி தகுதி பெறத் தவறியுள்ளது. பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவின் மைதானத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற அந்நாட்டுடனான தகுதிகாண் போட்டியில் தோற்றே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. இப்போட்டியின் மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், பெனால்டியில் 1-4 என்ற ரீதியில் தோல்வியடைந்தே உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. மறுபக்கமாக […]

அடையாளம் காணப்பட்டது: வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளியொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (01) மீட்கப்பட்ட சடலம், உயிரிழந்தவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா ரியால் என்பவராவார். குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பின்னர் […]

உலகின் மிகப்பெரிய சனத்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் ஆரம்பம்

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவில், தசாப்தத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் மிகப்பெரிய சனத்தொகை கணக்கெடுப்பு இன்று புதன்கிழமை (ஏப் 01) முதல் ஆரம்பமாகிறது. கொரோனா பெருந்தொற்றினால் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இத்திட்டம் தாமதமடைந்த நிலையில், தற்போது டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. சுமார் 30 இலட்சம் அரச அதிகாரிகள் இந்த ஒரு வருட காலப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆரம்பத்தில் பொதுமக்கள் இணையவழியில் தாமாகவே முன்வந்து விபரங்களைப் பதிவு செய்ய குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]

காதலியை கொன்று எரித்த காதலனுக்கு மரண தண்டனை!

கடந்த 2020ஆம் ஆண்டு மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியாபொல பகுதியில், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைத் தீயிட்டு எரித்த காதலனுக்கு மொனராகலை மேல்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி கலாநிதி தமித் நலிந்த ஹேவா வசம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கண்டி, பலகல்ல ரத்தரன்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரனகே டொன் அசேல பிரபாத் மிஹிரங்க வீரசிங்க (சம்பவத்தின் போது வயது 27) என்பவருக்கே இவ்வாறு […]

பாப்பரசர் லியோ ஈரான் போரை நிறுத்துமாறு அவரச வேண்டுகோள்!

ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சரியான வழியை கண்டறியுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசரான லியோ, ரோமிற்கு அருகிலுள்ள காஸ்டெல் காண்டோல்போவில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் போரை நிறுத்த விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். வன்முறையைக் குறைப்பதற்கான வழியை அவர் கண்டறிவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில், போரை ஆரம்பிப்பவர்களின் கைகள் “இரத்தத்தால் படிந்துள்ளன” […]