ஈரானின் அடுத்த இலக்கு: அப்பிள், கூகுள், மெட்டா, ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் போன்ற 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள்!

தமது அடுத்த இலக்காக 18 அமெரிக்க நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலை ஈரானிய புரட்சிகர காவற்படை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் அப்பிள், கூகுள், மெட்டா, ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் போன்ற 18 முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த நிறுவனங்கள் அதிகாரிகளின் “குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளில்” உடந்தையாக இருந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். “ஏப்ரல் 1, புதன்கிழமை, தெஹ்ரான் நேரப்படி இரவு 8:00 மணி […]
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதம்

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் தாமதத்துடன் தரையிறங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக, விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயார்ப்படுத்தப்பட்டன. ஒரு விமானம் மத்தளவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசாங்கம் வரம்பு மீறிச் செயற்படுகின்றது – கட்டார்

ஈரானிய அரசாங்கம் வரம்பு மீறிச் செயற்படுவதாக கட்டார் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள், அனுமதிக்கப்பட்ட அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாகக் கட்டார் வெளியுறவு அமைச்சு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போர் புரிந்து வரும் நிலையில், இப்போரில் நேரடியாகப் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கட்டார் தெரிவித்துள்ளது. கட்டார்ர மீது ஈரான் […]
வறண்ட வானிலை நாளை முதல் மாறக்கூடும்!
லங்கையில் நிலவும் வறண்ட வானிலை நாளை முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை நேரங்களில் மத்திய, சப்ரகமுவ, ஊவா […]
பனைத் தோப்பில் பாரிய தீ

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது வீடுகளுக்கோ, ஏனைய சொத்துக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், […]
பெறுமதி சேர் வரிப்பட்டியலை நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தும் திகதி 2026 ஜூலை 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம் விரைவில் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சீர்திருத்தம் ஆரம்பத்தில் 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. எவ்வாறாயினும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பெறுமதி சேர் […]
ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது. […]
போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது!

போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மரண தண்டனை சட்டத்திற்கு ஸ்பெய்ன் கடும் எதிர்ப்பு

இஸ்ரேலியர்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேல் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) கடுமையாகச் சாடியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை வழங்க அந்நாட்டு இராணுவ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சான்செஸ், இது “நிறவெறி (Apartheid) கொள்கையை நோக்கிய மற்றொரு படி” […]
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே […]