இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 31.03.2026நேற்று கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள் கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எவ்வித தடையுமின்றி இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்கரையை அண்மித்து வருகைதந்து கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும்வரையில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

இவ்வாறு அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதார வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர். இது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
அத்து மீறி எமது கடற்பரப்புகளுக்குள் உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளை கடற்படையினருக்குத் தெரிவதில்லையா?

அல்லது அத்து மீறி எல்லைதாண்டி எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கடற்படையினரிடமுள்ள கருவிகள் பழுதடைந்துள்ளனவா?

அவ்வாறு கடற்படையினரிடமுள்ள கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள். நாம் ஜனாதிபதியுடன்பேசி புதிய கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடுக்கை மேற்கொள்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்போது கடற்படை அதிகாரி பதிலளிக்கையில், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக 24மணித்தியாலங்களும் கடற்படையினர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் ரேடார் கருவிகள்மூலம் கண்காணித்து அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடற்படை அதிகரியினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு