தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் முதலிடம்!

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகின. அதன்படி, அகில இலங்கை ரீதியில் உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சியை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இம்மாணவன், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் 3A சித்திகளை பெற்றுள்ளார். அதேநேரம், அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலாவது புள்ளியை பெற்றுக் கொண்டுள்ளார்.
உலகம் ஒடுக்குமுறையாளரைத் துணிந்து எதிர்க்கவேண்டும் – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

தற்காப்புக்கான உரிமை என்பது பிறரால் வழங்கப்படும் சலுகை அல்ல. மாறாக அது ஒவ்வொரு இறையாண்மை கொண்ட தேசத்தின் உள்ளார்ந்த உரிமையாகும். உலகம் உண்மையில் அமைதியின் மீது அக்கறை கொண்டிருந்தால், ஒடுக்கப்பட்டவர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு இலகுவாக அறிவுரை கூறுவதை விடுத்து, ஒடுக்குமுறையாளரை துணிச்சலுடன் எதிர்கொள்ள முன்வரவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் தீவிரமடைந்திருக்கும் மோதல்களின் பின்னணியில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அலி சப்ரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அப்பதிவில் […]
இனவழிப்புச் செய்த ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு – தமிழ்தேசிய மக்கள் முன்னணி

இனவழிப்புச் செய்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரது தேவைக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் முகாவில் பகுதியில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து கடந்த 17 வருடங்களாக நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் 4வது பட்டாலியன் மின் மற்றும் இயந்திரவியல் பகுதி படைகளுக்காக காணிகளை வழங்கும் நோக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அளவீடு செய்து சுவீகரிக்கும் […]
வட மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள்; சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்க முன்னுரிமை – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் ) மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான ‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் […]
இணையதளம் மூலமாக தபால் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலியான இணையதளத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு வகையான நிதி மோசடி குறித்து அத்திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரினைத் தவறாகப் பயன்படுத்தி, கைபேசி குறுஞ்செய்திகள் ஊடாக பொதி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என அறிவித்து, அந்தப் பணத்தை இணையவழி முறையூடாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்திச் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து ‘Phishing Scam’ எனும் மோசடி நடவடிக்கை […]
நுரைச்சோலை மற்றும் புத்தளம் களப்புப் பகுதிகளைச் சூழவுள்ள மக்கள் பாதரச நச்சுத்தன்மைக்கு ஆளாகியிருக்கலாம்?

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இவர்கள் தொழில் ரீதியாக பாதரசத்துடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களாவர். தரம் குறைந்த நிலக்கரியை எரிப்பதன் மூலம் இலங்கையில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே இது குறித்து தெரிவிக்கையில், தரம் குறைந்த நிலக்கரியை எரிக்கும்போது வெளியேறும் பாதரசம் சூழலிலும் […]
டுபாயில் ஏவுகணை சிதறல்கள் விழுந்து விபத்து: இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயம்!

டுபாயில் வான்வழித் அச்சுறுத்தல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர், இரு இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் ஆகியோருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு டுபாயில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் இந்தச் சிதறல்கள் விழுந்ததில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு அமைவாகக் கையாளப்பட்டதாக டுபாய் ஊடகப் […]
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தல்; குற்றவாளிகள் அடையாளம்!

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது. இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பிரதான சந்தேகநபர்களும், நீதிமன்றில் இருந்த ஏனையோர் வெளியேற்றப்பட்டு, மூடிய அறைக்குள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். கடத்தப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் முன்னிலையிலேயே இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன்போது, முதலாவது அடையாள அணிவகுப்பில் […]
வறட்சியான வானிலை; நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது 75% என்ற அளவில் காணப்படுவதாக அத்திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கான நீரை வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் […]
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று(31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளடங்கலாக மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், 01.04.2026 (இன்று) முதல் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை […]