வட மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள்; சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்க முன்னுரிமை – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் ) மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான ‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரித்துஇ அதனை நிர்வகிப்பதற்கு உரிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மத்திய சுகாதார அமைச்சு மாகாண சுகாதார அமைச்சு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு ஒருங்கிணைப்பில் செயற்படவுள்ளது.

அத்துடன் புதிய சிகிச்சை நிலையத்துக்காகக் கைதடியில் அரச காணி உத்தியோகபூர்வமாகச் சுகாதாரத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்கெனத் துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட நவீன கட்டட வரைபடங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

தேசியக் கொள்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தலா ஒரு சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் அதற்கான ஆளணி அனுமதிகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒட்டிசம் குறைபாட்டுக்கு மாத்திரமன்றி மூளைவளர்ச்சி தாமதம் அறிவுசார் குறைபாடுகள் மூளை முடக்குவாதம் மற்றும் ஏனைய நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் இந்த நிலையத்தினூடாக முழுமையான சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

உளவள மற்றும் நரம்பியல் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாகப் பேச்சுச் சிகிச்சை மற்றும் தொழில்சார் சிகிச்சை போன்ற இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைநெறிகளை ஆரம்பித்து நிபுணர்களை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுகளின் நிதியொதுக்கீடுகளுக்கு அப்பால் வெளிவாரியான கொடையாளர்களின் உதவிகளைச் சட்டபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்