இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 வயதுச் சிறுமி மற்றும் 13 வயதுச் சிறுவன் உட்பட மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் அவசர மருத்துவச் சேவை அமைப்பான மேகன் டேவிட் அடோம் (Magen David Adom) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: தாக்குதலின் போது சிதறிய உடைந்த பாகங்கள் (Shrapnel) தாக்கியதில் 11 வயதுச் சிறுமி காயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன் வரலாற்றுச் சாதனை – வட மாகாண ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரன், 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவனையும், உயிரியல் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற ஆ.கிரிஷாந்த் மற்றும் க.மதுமினி ஆகியோரையும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்து வாழ்த்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றமை மாகாணக் கல்வி வரலாற்றின் புதிய அத்தியாயம் எனப் பாராட்டிய ஆளுநர், இம்மாணவர்கள் ஏனையோருக்குச் சிறந்த முன்மாதிரிகள் எனவும் குறிப்பிட்டார்.