வங்காலை கடற்பகுதியில் கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

மன்னார், வங்காலை கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளை பிடித்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான ‘இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ’ (SLNS Pussadeva) அதிகாரிகளினால் வங்காலை கடற்பரப்பில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரத்தில் சுழியோடி முறையில் கடல் அட்டைகளை சேகரித்துக்கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் வளைத்து […]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் பிணையில் விடுதலை

ஒரு வருட காலப்பகுதிக்குள் 24 கோடி ரூபாவிற்கும் அதிக முறையற்ற சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அசாங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான முன்னாள் எம்.பி யை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து கட்டளையிட்டார். சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி […]

பாடசாலை மாணவன் துஷ்பிரயோகம்: அதிபர் சரண்

பாடசாலை மாணவன் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அதிபர், இன்று (31) காலை மகாவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது மாணவனை அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மகாவெல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த அதிபரைக் கைது செய்யப் பல பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தின. அவர் பல்வேறு இடங்களில் ஒளிந்திருப்பதாகப் பிரதேச மக்கள் வழங்கிய […]

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் தனி வீட்டுத் திட்டத்தில் பாரபட்சம்; மக்கள் போராட்டம்

பண்டாரவளைப் பிரதேசத்திற்குட்பட்ட நாயாபெத்த தோட்டத்தில், மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் தனி வீட்டுத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை (30) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பயனாளர் தேர்வில் குளறுபடிகள்: தோட்டத்திற்கு வெளியிலிருந்து வேலைக்கு வருபவர்களுக்கும், ஏற்கனவே வீடுகள் பெற்றவர்களுக்கும் மீண்டும் வீடுகள் வழங்கப்படுவதாகவும், தகுதியானவர்கள் புறக்கணிப்பு: நீண்டகாலமாகத் தோட்டத்தில் வசித்து வரும், உண்மையில் வீடு தேவைப்படும் தகுதியுடைய குடும்பங்கள் இத்திட்டத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மை இன்மை: பயனாளிகளைத் தெரிவு […]

எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் எரிசக்தி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை அரசாங்க அமைச்சர்களே தற்போது ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், இந்தத் தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை பொதுமக்களே […]

குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் புதிய கடும் சட்டம்

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்ட மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய குற்ற விசாரணை பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது தொடர்பில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளின் ஊடாக, குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையிலுள்ள […]

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 7 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சேவை தேவையின் கருதியே இந்த நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு இறக்குமதியாளர் 1,040 மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

செலவுகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும் கொத்து (Kottu) போன்ற பிரபலமான உணவுப் பொருட்களின் விலைகள் 30 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் (Short eats) விலைகள் […]

மட்டக்களப்பு கிணற்று கொலைச் சம்பவம்: வத்தளை மருந்தக உரிமையாளர் கைது

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியில் பெண்கள் ஏமாற்றப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்ட பின்னர் கிணறுகளில் வீசப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பில் வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மறுநாள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 3 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், […]