கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெய் விலை உயர்வால் பெரிதும் பாதிப்பு

மண்ணெண்ணெய் விலை உயர்வு மற்றும் சட்ட விரோத கடற்றொழிலால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துவிட்டு திடீரென்று எரிபொருளுக்கு விலை அதிகரித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அதே வேலைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொள்கின்றது.தற்போதைய எரிபொருள் விலை ஏற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். […]

ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற கொலை; மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர் நீதிமன்றம் இன்று (31) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர்களான […]

இரண்டாவது நாளாகவும் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வு…

குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் நாளாக இன்றும் (31.03.2026) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம் மக்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளின் பின்னர் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நேற்று (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாளாகிய […]

நெருக்கடி கால முகாமைத்துவ நிலையில் ஆசிய விமானப் போக்குவரத்துக்கள்!

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரினால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், கொரியன் எயார் உள்ளிட்ட ஆசிய விமான சேவை நிறுவனங்கள் ‘நெருக்கடி கால முகாமைத்துவ’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொரியன் எயார் விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக கொரியன் எயார் நிறுவனம் அவசரகால முகாமைத்துவ முறையை அமுல்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த “உள்வாரிச் செலவுகளைக் குறைக்கும்” நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமல்லாது, நிறுவனத்தின் […]

புதிய கொவிட் திரிபு ‘சிக்காடா’ வைரஸ் 23 நாடுகளுக்குப் பரவல்!

கொரோனா வைரஸின் உருமாறிய புதிய துணைத் திரிபான BA.3.2, தற்போது அமெரிக்கா உட்பட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப் பொதுவாக ‘சிக்காடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரிபு அதன் அசாதாரணமான மரபணு மாற்றங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு ஒருமுறை நிலத்திலிருந்து வெளியே வரும் ‘சிக்காடா’ பூச்சிகளைப் போலவே, இந்த வைரஸும் நீண்ட காலம் கண்டறியப்படாமல் மறைந்திருந்து, திடீரென […]

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி; அலுமினியம் விலையும் அதிகரித்தது

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது. இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா – உக்ரேன் போரின் போது […]

விசேட விடுமுறை மற்றும் மின்சார கட்டுப்பாடுகள் தொடர்பில்

த்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், எரிசக்தியை நிர்வகிப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கான […]

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சக மாணவரைத் தாக்கிய மூன்று மாணவர்களும்!

ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று மாணவர்களும் கடந்த 28 ஆம் திகதி இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். தரம் 10 இல் […]

அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் – சாணக்கியன்

ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாகவும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்று, ஒரு வரியில் ஒரு ஆவணத்தினை நாம் வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளது. பிரிவினையை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே, […]

கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு சுற்றுலா விசா

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா (Free Tourist Visa) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2025-07-21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இதற்கான வரைவு உத்தரவுகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் […]